எச்.1.பி விசாத் திட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தி அமெரிக்க பணியாளர்களை நீக்கம் செய்ய பயன்படுத்தினால் கடும் நடவடிக்கைகள் பாயும் என்று அமெரிக்க நீதித்துறை நிறுவனங்களை எச்சரித்துள்ளது.
இதுவரை அமலாக்கம் பெறாத அதிபர் ட்ரம்பின் எச்1பி விசா சீர்த்திருத்தங்களை அமல் செய்யும் முயற்சியில் அமெரிக்க நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சான் ஸ்பைசர் கூறும்போது, “அதிபர் ட்ரம்ப் எச்1பி விசா திட்டம் குறித்து முன்பு பேசியிருந்தார்...எனவே ட்ரம்ப் நிர்வாகம் அதிபரின் எச்1பி விசாத் திட்டங்களை அமல்படுத்தி அமெரிக்கப் பணியாளர்களின் நலன்களை காக்க முடிவெடுத்துள்ளது” என்றார்.
திங்களன்று இந்த ஆண்டுகான எச்1பி விசா விண்ணப்ப நடைமுறைகள் தொடங்கியுள்ளன. நிறுவனங்கள் எச்1பி விசாவை முறைகேடாகப் பயன்படுத்துவதைத் தடுக்க அமெரிக்க சுங்க மற்றும் குடியேற்ற சேவை சில கடுமையான நடைமுறைகளை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக எச்1பி விசா மூலம் நிறுவனத்தில் அமர்த்தப்பட்ட பணியாளர்கள் குறித்து அவ்வப்போது சோதனை மேற்கொள்வது அடங்கும்.
“நாட்டில் தகுதி பெற்ற திறமையாளர்கள் குறைபாடு இருப்பின் நிறுவனங்கள் அயல்நாட்டு திறன் பணியாளர்களை எச்1பி விசா மூலம் பணியமர்த்தலாம். ஆனாலும் திறமை இருந்தும், இந்தத் துறையில் பணியாற்றும் ஆர்வமும் உத்வேகமு கொண்ட அமெரிக்க பணியாளர்கள் புறக்கணிக்கப்படுவதுதான் நடந்து வருகிறது. அமெரிக்கப் பணியாளர்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்படுகின்றனர். எனவே நம் பணியமர்த்தல் திட்டங்களில் எச்1பி விசா மூலம் நடக்கும் மோசடியை தடுப்பதே சுங்க மற்றும் குடியேற்ற சேவைகள் துறையின் முதற்கண் கடமையாகும்” என்று இந்த அமைப்பு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
சுமார் 85,000 எச்1பி விசா பயனாளர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பில் உள்ள சுங்க மற்றும் குடியேற்றத்துறை கூறும் போது, இத்திட்டத்தின் கீழ் பயனாளர்கள் நிர்வாகப் பணிகளுக்காகவே தேர்வு செய்யப்படுகின்றனர், எனவே 2 ஆண்டு பட்டப்படிப்பு படித்த கம்ப்யூட்டர் புரோகிராமர்கள் சிறப்பு பணியிடத்துக்கான பணிகளுக்கு தகுதி பெற மாட்டார்கள்.
ஒரு நபர் கம்ப்யூட்டர் புரோகிராமராக பணியிலமர்த்தப்பட்டு அவர் தனது தகவல் தொழில்நுட்ப திறமைகள் மூலம் நிறுவனத்துக்கு உதவலாம், இது அவரது பணியின் ஒரு பங்காக இருக்கலாம் ஆனால் இதுவே அவர் ஸ்பெஷாலிட்டி பிரிவில் சேர்ப்பதற்கு போதுமானதகா இருக்காது. மாறாக மனுதாரர், அதாவது எச்1பி விசா கூறுபவர் புதிய திட்டத்தின் விளக்கங்களுக்கு ஏற்ப அந்தக் குறிப்பிட்ட பணி எப்படி ஸ்பெஷாலிட்டி பிரிவின் கீழ் வருகிறது என்பதை கறாராக நிறுவ வேண்டும், என்கிறது இந்த அறிக்கை.
அமெரிக்க ,குடிமை உரிமைகள் பிரிவின் பொறுப்பு உதவி அட்டர்னி ஜெனரல் டாம் வீலர் அறிக்கை ஒன்றில் கூறும்போது, “அமெரிக்கப் பணியாளர்களை சாதகமற்ற ஒரு தகுதியில் பணியிலமர்த்தியிருக்கக் கூடாது. ஏனெனில் அவரை எளிதில் எச்1பி விசா ஊழியர் மூலம் மாற்றி விடக்கூடிய நிலையில் அமெரிக்க ஊழியரின் பணியை நிர்ணயித்தல் கூடாது. அப்படி செய்தால் அமெரிக்க நீதித்துறை முழு மனதுடன், உறுதியுடன் இத்தகைய போக்குகளை விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளும்” என்று எச்சரித்துள்ளது.
அதிகபட்சமாக எச்1பி விசா பணியாளர்களைக் கொண்டுள்ள நிறுவனம் மற்றும் எச்1பி விசாவுக்கு மனு செய்யும் நிறுவனம் பெரிய ஐடி நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் நிறுவனங்கள் ஆகியவற்றின் வணிக ரீதியாக கிடைக்கும் தரவுகளை வைத்து நிறுவனத்தின் அடிப்படை வணிக தகவல்களை மதிப்பிட முடியாது போகும் நிறுவனங்கள் அமெரிக்க சுங்க மற்றும் குடியேற்றத்துறை தனது கண்காணிப்பு சோதனைகள் இலக்காக்கும்.
அவ்வப்போது நிறுவனங்களுக்குச் சென்று நேரடியாகச் சோதனை செய்து எச்1பி விசா மோசடி நடைபெற்றுள்ளதா என்பதை சோதித்தறியும் முறை அமலுக்கு வருகிறது என்று கூறியுள்ளது அமெரிக்க நீதித்துறை.
மேலும் முறைகேடுகள் நடந்தலோ, அது போன்ற சந்தேகம் எழுந்தாலோ அது பற்றிய புகார் தெரிவிக்க தனி மின்னஞ்சல் முகவரியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago