பொலிவியா திருவிழாவில் விபத்து: 4 பேர் பலி, 60 பேர் காயம்

By செய்திப்பிரிவு

தென் அமெரிக்க நாடான பொலிவி யாவில் புகழ்பெற்ற திருவிழா ஊர் வலத்தின்போது பாலம் இடிந்து விழுந்ததில் 4 பேர் இறந்தனர், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந் தனர்.

பொலிவியாவின் ஒருரோ நகரில் புகழ்பெற்ற கலாச்சார திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது, வழியில் இருந்த இரும்புப் பாலம் எடை தாங்காமல் இடிந்து விழுந்தது. இதில் 3 இசைக் கலைஞர்கள் உள்பட 4 பேர் இடிபாடுகளில் சிக்கி இறந்தனர்.

மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பொலிவியா அதிபர் எவோ மொரேல்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சுமார் 35 ஆயிரம் நாட்டியக்காரர்கள், 6 ஆயிரம் இசைக் கலஞர்கள் பங்கேற்கும் இவ்விழாவை மனித குலத்தின் கலாச்சார பெருமையாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. பெருமளவு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வரும் இந்த விழாவில் சுமார் 3 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது. விழா தொடர்ந்து நடைபெறும் என விழாக்குழுவினர் அறிவித்தனர்.-ஏ.எப்.பி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

13 mins ago

உலகம்

24 mins ago

உலகம்

6 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்