இந்தோனேசிய அதிபரின் தொலைபேசி ஒட்டு கேட்பு

By செய்திப்பிரிவு

இந்தோனேசிய அதிபர் சுசிலோ பாம்பாங் யுதோயோனோ உள்ளிட்டோரின் தொலைபேசி உரையாடலை ஆஸ்திரேலிய உளவுத் துறை ஒட்டுக் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள தனது தூதரை இந்தோனேசிய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.

இந்த உளவு விவரங்கள் அமெரிக்க உளவுத் துறை முன்னாள் பணியாளர் எட்வர்ட் ஸ்னோடென் வெளியிட்ட ரகசிய ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளன என்று ஏபிசி நியூஸ், கார்டியன் ஆஸ்திரேலியா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தோனேசிய அதிபர் சுசிலோ பாம்பாங்கின் தொலைபேசி உரையாடல்களை 2009-ம் ஆண்டு 15 நாள்கள் ஆஸ்திரேலிய உளவு அமைப்பு ஒட்டு கேட்டுள்ளது.

ஏற்கனவே, இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகம் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த புதிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கோபமடைந்த இந்தோனேசிய அரசு, ஆஸ்திரேலியாவில் உள்ள தனது தூதரை திரும்ப அழைத்துக் கொண்டது.

அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்ட்டி நடாலேகாவா கூறுகையில், “இந்த பிரச்சினை தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தூதரை அழைத்துள்ளோம்” என்றார்.

இந்தோனேசிய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டியூகு பைஸாஸ்யா தனது டுவிட்டர் இணையதளத்தில், “இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். இரு நாடுகளின் உறவில் மீண்டும் நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதே இப்போதைய தேவை” என்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மின்னணு உளவுப் பிரிவு, பாதுகாப்பு சமிஞ்கை இயக்குநரகம் ஆகியவற்றிலிருந்து உளவு பார்த்தது தொடர்பான தகவல்கள் அனைத்தும் கிடைத்ததாக ஏபிசி நியூஸ் தெரிவித்துள்ளது.

இந்தோனேசிய அதிபர் மட்டுமின்றி, அவரின் மனைவி கிரிஸ்தியானி ஹெராவதி, துணை அதிபர் போய்டியோனோ, முன்னாள் துணை அதிபர் யுசுப் கால்லா மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன.

கருத்து கூற மறுப்பு

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட்டிடம் இது தொடர்பாக கேட்டபோது, கருத்து கூற மறுத்துவிட்டார். அவர் கூறுகையில், “அனைத்து நாடுகளின் அரசுகளும் தகவல்களை சேகரிக்கின்றன. ஒவ்வொரு நாடும், பிற நாடுகள் தொடர்பான தகவல்களை சேகரித்து வருகின்றன. முக்கிய உளவுத் தகவல்கள் குறித்து எதையும் நாங்கள் பகிர்ந்துகொள்ள மாட்டோம். நாங்கள் சேகரிக்கும் தகவல்கள் நட்பு மற்றும் கூட்டாளி நாடுகளுக்கு உதவுவதற்குத்தான். யாருக்கும் கெடுதல் செய்யும் நோக்கம் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

9 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்