ஆங் சான் சூச்சி உடன் மோடி சந்திப்பு

By பிடிஐ

மியான்மர் ஜனநாகத் தலைவர் ஆங் சான் சூச்சியை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.

12-ஆவது ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக செவ்வாய்க்கிழமை மியான்மர் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவரும், ஜனநாயகப் போராளியுமான ஆங் சான் சுச்சியை இன்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது பிரதமர் நரேந்திர மோடியிடம், "இந்தியா எனது இரண்டாவது தாய் வீடு" என்று ஆங் சான் சூச்சி கூறியதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சயீத் அக்பருதீன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆங் சான் சூச்சியின் தாயார் தாவ் கின் யீ இந்தியாவுக்கான தூதராக பதவி வகித்தவர் ஆவார். அந்தக் காலக்கட்டத்தில் சூச்சி தனது பள்ளிப் படிப்பை டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியிலும், உயர் கல்வியை சிம்லாவிலும் முடித்தார்.

ஆங் சான் சூச்சி தனது 21 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக் காவலிலேயே அந்நாட்டு ராணுவத்தால் சிறை வைக்கப்பட்டார். கடந்த 2012-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் இந்தியா வந்திருந்தது நினைவுக்கூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

1 day ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

மேலும்