பிலிப்பைன்ஸில் கடும் சண்டை: தீவிரவாதிகள் தாக்குதலில் 13 கடற்படை வீரர்கள் பலி

By ஏஎஃப்பி

பிலிப்பைன்ஸில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 13 கடற்படை வீரர்கள் பலியா யினர்.

பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் ராணுவத்துக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையில் தொடர்ந்து மோதல் நிலவுகிறது. மராவி நகரில் கடந்த 2 வாரங்களாக இரு தரப்பினருக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் கடற்படை வீரர்கள் 13 பேர் பலியாயினர் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்தார்.

கடந்த மாதம் 23-ம் தேதி ஐஎஸ் தீவிரவாதிகளின் கறுப்பு கொடியை ஏந்தி தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், நகரை தங்கள் ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ராணுவ லெப்டினனட் ஜோ அர் அரேரா கூறும்போது, ‘‘மராவி நகரில் கடும் மோதலுக்கு இடையில் வீடு வீடாக தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம். தீவிரவாதிகள் தாக்குதலில் 13 பேர் பலியாகி உள்ளனர். அவர்களுடன் சேர்த்து இதுவரை 58 பேர் இறந்துள்ளனர். இந்த சண்டையில் 138 தீவிரவாதிகள், பொதுமக்கள் 20 பேரும் பலியாகி உள்ளனர்’’ என்றார்.

இதற்கிடையில் தீவிரவாதிகள் அதிநவீன ஆயுதங்கள் மூலம் வான் வழியாகவும், தரை வழியாகவும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், மராவி நகரில் 10 சதவீத பகுதிதான் தீவிரவாதிகள் வசம் உள்ளதாக ராணுவத்தினர் கூறுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

58 mins ago

உலகம்

10 hours ago

உலகம்

1 day ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்