அமெரிக்காவுக்கான இந்திய தூதராகப் பொறுப்பேற்கிறார் ஜெய்சங்கர்

By செய்திப்பிரிவு

அமெரிக்காவுக்கான புதிய இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமை வாஷிங்டன் நகரைச் சென்றடைகிறார்.

துணைத்தூதர் தேவயானி கோப்ரகடே கைது விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக் கிடையேயான தூதரக உறவில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் புதிய தூதராக ஜெய்சங்கர் பொறுப்பேற்பது முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது சீனாவுக்கான இந்தியத் தூதராக உள்ள எஸ்.ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமை அமெரிக்காவுக்கு பயணமாகிறார்.

தேவயானி கைது விவகாரத்தால் இந்தியா, அமெரிக்காவுக்கு இடையேயான உறவு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான நிலையை அடைந்துள்ளது. இவ்விவகாரத்தில் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், தேவயானி மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் எனவும் இந்தியா கோரி வருகிறது.

ஆனால், இதற்கு அமெரிக்கா மறுத்து வருகிறது. இந்நிலையில் ஜெய்சங்கர் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராகப் பொறுப்பேற்கிறார். இந்தியா மற்றும் அமெரிக்கா வுக்கு இடையேயான ஆக்கப்பூர் வமான அணுசக்தி ஒப்பந்தம் நிறை வேற்றுவதில் ஜெய்சங்கர் முக்கியப் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

ஜெய்சங்கர் வாஷிங்டனை அடைந்தாலும், தூதர் என்ற முறையில் அதிபர் பராக் ஒபா மாவை முறைப்படி சந்திக்க அவர் சில வாரங்கள் காத்திருக்க வேண்டும். ஏனெனில் ஆண்டு இறுதி விடுமுறையைத் தன் குடும்பத்துடன் கழித்துக் கொண்டி ருக்கும் ஒபாமா அலுவலக ரீதியாக வெள்ளைமாளிகைக்கு இன்னும் திரும்பவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

15 hours ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்