ஜப்பானுடன் பேச்சு நடத்த சீனா விருப்பம்

எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்து வதற்கு உகந்த சூழ்நிலையை ஜப்பான் ஏற்படுத்தும் என நம்புகி றோம். அந்நாட்டுடன் பேச்சு நடத்த ஆர்வத்துடன் இருக்கிறோம் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு சீனக் கடலில் தீவு கூட்ட மொன்றை ஜப்பானும், சீனாவும் உரிமை கோரி வருகின்றன. இப்பிரச் சினையால் இருதரப்பு உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதைத் தவிர்த்த பிற விஷயங்களில் கவனம் செலுத்தவும், பேச்சுவார்த்தை நடத்தவும் இரு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்புக் குழு கூட்டம் பெய்ஜிங்கில் விரைவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பெய்ஜிங் வரவுள்ளார். அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, ஷின்சோ அபே சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ கூறும்போது, “இப்பேச்சு வார்த்தைக் கூட்டத்தை நடத்துவதில் ஜப்பான் தரப்பு அக்கறையுடன் செயல்பட வேண்டும். அப்போது எடுக்கப்படும் முடிவுகளை மதித்து, அமல்படுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக பேச்சு நடத்துவதற்கு உகந்த சூழ்நிலையை ஜப்பான் ஏற்படுத்த வேண்டும். பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற ஜப்பானின் கோரிக்கைக்கு நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

21 hours ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்