லிபிய விமான தளத் தாக்குதலில் 141 பேர் பலி

By கார்டியன்

லிபியாவின் மேற்கு பகுதியிலுள்ள அரசு ராணுவ விமானத் தளத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 141 பேர் பலியாகினர்.

இந்தத் தாக்குதலில் எதிரொலியாக லிபிய பாதுகாப்பு அமைச்சர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறிப்பு லிபியா அரசு தரப்பில், "லிபியாவில் வியாழக்கிழமை பிராக் அல் ஷாட்டி நகரில் ராணுவ விமானத் தளத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 141 பேர் பலியாகினர். இதில் பெரும்பாலானவர்கள் ராணுவ வீரர்கள். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலை லிபிய கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்து புரட்சியைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு லிபிய கிளர்ச்சியின்போது, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கின. இதில், 34 ஆண்டுகள் லிபிய அதிபராக இருந்த முவம்மர் கடாபி கொல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ஐ.நா. ஆதரவுடன் தேசிய இடைக்கால பேரவையின் கீழ் ஆட்சி அமைந்தது. ஆனால், அதன்பின் லிபியாவில் குழப்பம் ஏற்பட்டது. ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் லிபியாவில் போட்டி நாடாளுமன்றங்களை ஏற்படுத்தி இரு பிரிவாக அரசாட்சி செய்து வருகின்றனர்.

சிரியாவின் கடாபி கொல்லப்பட்டது முதல் அந்நாட்டில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. ஒரு பக்கம் ஐஎஸ் தீவிரவாதிகள், மறுபக்கம் அரசுக்கு எதிரான கிளர்ச்சி அமைப்புகள் என வன்முறைகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

10 days ago

மேலும்