துருக்கியின் ஹக்காரி மாகாணத் தில் உள்ள ஒரு ராணுவ தளத்தை நேற்று முற்றுகையிட முயன்ற குர்திஷ் தீவிரவாதிகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 35 பேர் பலியாயினர்.
இதுகுறித்து ராணுவ அதிகாரி கள் கூறியதாவது: வெள்ளிக் கிழமை நள்ளிரவில் ஹக்காரி மாகாணத்தின் குகுர்கா மாவட்டத் தில் ராணுவத்துக்கும் குர்திஸ்தான் கட்சியின் தீவிரவாதிகளுக்கும் (பிகேகே) இடையே நடந்த கடும் சண்டையில் 8 ராணுவ வீர்ரகள் பலியாயினர். மேலும் 25 வீரர்கள் காயமடைந்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள ராணுவ தளத்தை குர்திஷ் தீவிரவாதிகள் முற்றுகையிட முயன்றது உளவு செயற்கைக் கோள் மூலம் தெரியவந்தது. இதை முறியடிக்க வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 23 பேர் பலியாயினர். தரைவழியாக நடந்த சண்டையில் மேலும் 4 பேர் பலியாயினர். இதுதவிர, குகுரா மாவட்டத் தில் நடந்த சண்டையில் 8 தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர்.
துருக்கியில் கடந்த 15 மற்றும் 16 தேதிகளில் ராணுவத்தின் ஒரு பிரிவினர் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்ற முயன்றனர். எனினும், அதிபரின் முயற்சியால் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
இதையடுத்து, ராணுவப் புரட்சிக்குக் காரணமான 40 சதவீத ஜெனரல்கள் மற்றும் அட்மிரல்கள் மற்றும் 1,700 வீரர்கள் பணியிலிருந்து நீக்கப் பட்டுள்ளனர். அதேநேரம் 99 கர்னல்களுக்கு ஜெனரல் களாக பதவி உயர்வு வழங்கப் பட்டுள்ளது. இந்நிலையில் குர்து பிரிவினர் வசிக்கும் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago