பிரிட்டனில் விவாகரத்தான மனைவிக்கு 53.1 கோடி அமெரிக்க டாலர் (சுமார் ரூ.3,291 கோடி) ஜீவனாம்சம் வழங்க தொழிலதிபர் ஒருவருக்கு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இது பிரிட்டனில் அதிக தொகை ஜீவனாம்சமாக வழங்க உத்தரவிடப்பட்ட விவாகரத்து வழக்குகளில் ஒன்றாகும்.
கிறிஸ் ஹான் என்பவர் பிரிட்டனில், ஹெட்ஜ் பண்ட் முதலீட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.74,382 கோடி ஆகும். இவரும், இவர் மனைவியும் இணைந்து குழந்தைகள் முதலீட்டு நிதி என்ற அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர். பிரிட்டனின் பெரும் அறக்கட்டளைகளுள் இதுவும் ஒன்றாகும். இதன் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் ரூ. 28,533 கோடியாகும். இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக கடந்த 2012-ம் ஆண்டு வரை கிறிஸ் ஹானின் மனைவி ஜேமி கூப்பர் ஹான் பணியாற்றி வந்தார்.
இவர்களின் 17 ஆண்டு திரு மண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்துள்ளது. விவாகரத்தின் போது, சொத்தில் 50 சதவீதம் தனக்கு கிடைக்க வேண்டும் என ஜேமி தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், ஹான் தரப்பில், தனது மனைவிக்கு 25 சதவீத சொத்து மதிப்பு மட்டுமே அளிக்கப்பட வேண்டும் என வாதிடப்பட்டது.
தற்போது எந்த விகிதத்தில் சுமார் ரூ. 3,291 கோடி ஜீவனாம்சம் தரப்படுகிறது என்பது வெளியிடப் படவில்லை. டிசம்பரில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம்.
கூப்பருக்கு சுமார் ரூ.3,059 கோடி ரொக்கமாக வழங்கப்படும். எஞ்சிய தொகை அவரின் ஓய்வூதி யத் திட்டத்துக்கு அளிக்கப்படும். அவருக்கு உடனடியாக சுமார் ரூ.61 கோடி வழங்கப்படும்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago