ஆசியாவில் முதல் முறை: ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்த தைவான்

By கார்டியன்

ஆசியாவிலேயே முதல்முறையாக ஓரினச் சேர்க்கையாளர் சட்டப்படி திருமணம் செய்துகொள்ள அனுமதி அளித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தைவான் நீதிமன்றம் கூறும்போது, "திருமணம் செய்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் அதற்கான சுதந்திரமும், உரிமை உண்டு. இரண்டு நபர்கள் (ஓரினச் சேர்க்கையாளர்கள்) தங்கள் பந்தத்தை நிரந்தரமாக தொடர எண்ணினால் அவர்கள் சட்டப்பூர்வமாக திருமணத்தை பதிவு செய்துகொள்ள உரிமை உண்டு" என்று கூறியுள்ளது.

தைவான் அரசின் இந்த தீர்ப்பு எல்ஜிபிடி சமூகத்தினரிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

தைவான் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பையடுத்து தைவான் தெருக்களில் கூடிய எல்ஜிபிடி ஆதர்வாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தைவான் நாட்டைப் பொறுத்தவரை அங்கு அதிகளவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் சமூகம் உள்ளது. ஆண்டுதோறும் ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமை வலியுறுத்தி பேரணி நடைபெறும். குறிப்பாக ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டப்படி அங்கிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில் தைவான் நீதிமன்றம் அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

10 days ago

மேலும்