இந்திய தொழிலாளர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டுமென்று வளைகுடா நாடுகளிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட பெட்ரோலிய வளம்மிக்க வளைகுடா நாடுகளில் சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணியாற்றி வரு கின்றனர். வளைகுடா நாடுகளில் பெருமளவில் பணியாற்றும் வெளிநாட்டவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள்தான்.
எண்ணெய் துரப்பண பணி, கட்டுமானம், பெட்ரோலிய பொருட் களை எடுத்துச் செல்வது என மிகவும் ஆபத்தான பணிகளை, கடுமையான சூழ்நிலைகளில் இந்திய தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். வளைகுடா நாடு கள் எண்ணெயை விற்று பெரும் செல்வந்த நாடுகளாக இருப்பதற்கு இவர்களின் கடின உழைப்பும் முக்கிய காரணம். இந்நிலையில் இந்திய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க வேண்டு மென்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
முக்கியமாக வளைகுடா நாடு களில் உள்ள இந்திய தூதர்கள், அந்நாட்டு அரசு தரப்பினரை சந்தித்து இந்திய தொழிலாளர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்பட வேண்டியது குறித்து எடுத்துக் கூறி வருகின்றனர்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஒய்.எஸ். கட்டாரியா கூறியது: அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, பண வீக்கம், வளைகுடா நாடுகளில் வாழ்வதற்கான செலவு அதிகரித்து வருவது போன்றவற்றை சுட்டிக் காட்டி இந்திய தொழிலாளர்களுக்கு அதிகபட்ச ஊதியம் வழங்க வேண்டுமென்று வளைகுடா நாடுகளிடம் இந்திய தூதர்கள் வலியுறுத்தியுள்ளனர் என்றார்.
தொழிலாளர்களுக்கு கூடுதல் சம்பளம் வாங்கித் தரும் இந்திய அரசின் முயற்சி எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பது தெரியவில்லை. எனினும் குறைந்தபட்ச ஊதியம் எவ்வளவு என்று கூறாத நிலையில் மத்திய அரசு இந்திய தொழிலாளர்கள் வெளிநாடு செல்ல உடனடியாக அனுமதி அளிக்காமல் இருக்க வாய்ப்புண்டு. இதனால் வளை குடா நாடுகளில் தொழிலாளர் களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு ஊதியத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இது தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு தொழிலாளர்களை வரவழைத்து தரும் நிறுவனத்தின் இயக்குநர் முகமது ஜிந்ரான் கூறுகையில், எவ்வளவு சம்பளம் தர வேண்டும் என்பதை இந்திய அரசு வளைகுடா நாடுகளுக்கு கண்டிப்புடன் கூற முடியாது. வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் சங்கம் அமைக்க தடை உள்ளது. அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. வங்க தேசம், நேபாளம், பாகிஸ்தானில் இருந்து குறைந்த சம்பளத்தில் தொழிலாளர்களை வரவழைத்துக் கொள்ள வளைகுடா நாடுகளுக்கு வாய்ப்பு உள்ளது என்றார்.
எனினும் வளைகுடா நாடுகளில் உள்ள தனியார் எண்ணெய் நிறுவனங்கள் இந்திய தொழிலாளர்களை பெருமளவில் விரும்புவதாக தெரிகிறது. சில நிறுவனங்கள் அதிக ஊதியம் தருவதாக கூறி அழைத்துச் சென்று பின்னர் குறைந்த ஊதியம் தரும் நிலையும் உள்ளது. சில தொழிலாளர்கள் இதைத் தெரிந்து கொண்டே அங்கு செல்கின்றனர்.
இந்திய தொழிலாளர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண் டும் என்று மத்திய அரசு கூறுவதில் உள்நாட்டு பொருளாதார நலனும் உள்ளது. மற்ற எந்த நாடுகளையும் விட இந்திய தொழிலாளர் கள்தான் தாய் நாட்டுக்கு பெரு மளவில் பணம் அனுப்புகின்றனர். இதனால் உள்ளநாட்டு பொருளா தாரம் வலுவடைகிறது.
வெளிநாட்டு தொழிலாளர்கள் சம்பளம் குறித்து கருத்துத் தெரிவித்த சவூதி கட்டுமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாவாஸ், இந்தியா மட்டுல்லாது பல்வேறு நாடுகளும் தங்கள் தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் வேண்டுமென்று வலியுறுத்துகின்றன. இப்போது 800 முதல் 900 ரியால் வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. இதனை 1500 ரியால் என அதிகரித்தால் கட்டுமான நிறுவனங்களில் லாபம் பெருமளவில் குறைந்து நிறுவனத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இது வளைகுடா நாடுகளின் கட்டுமானத் துறையில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago