அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டிடம்

By செய்திப்பிரிவு

நியூயார்க்கில் கட்டப்பட்டு வரும் உலக வர்த்தக மையம், கட்டி முடிக்கப்பட்டால் அது அமெரிக்காவின் மிக உயரமான கட்டிடமாக இருக்கும் என அக்கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள கட்டிடக்கலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உயரமான கட்டிடங்களுக்கான குழுவின் கட்டிடக் கலை நிபுணர்கள், ஓர் உலக வர்த்தக மையத்தின் உச்சியில் அமைக்கப்படும் 124.4 மீட்டர் (408 அடி) உயரமுள்ள ஆன்டெனா, அக்கட்டிடத்தின் நிரந்தரமான கட்டுமான அம்சம் என்பதற்கான ஒப்புதலை அளித்துள்ளனர். அந்த ஆன்டெனா கோபுரத்தின் உயரம், கட்டிடடத்தின் மொத்த உயரத்துடன் சேர்த்துக் கணக்கிடப்படும்.

இதன் மூலம் கட்டிடத்தின் உயரம் 417 மீட்டர் (1,368 அடி), கோபுரத்தின் உயரம் இரண்டும் சேர்ந்து கட்டிடத்தின் மொத்த உயரம் 1,776 அடியாக இருக்கும். இதன் மூலம் அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டிடமாக இது இருக்கும்.

கடந்த 2001 ஆம் ஆண்டு நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட அதே இடத்தில், புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

தற்போது சிகாகோவில் உள்ள சீயர்ஸ் கோபுரம் (442 மீட்டர், 1,450 அடி) அமெரிக்காவின் உயர்ந்த கட்டடமாக உள்ளது. உலகின் உயர்ந்த கட்டிடம் துபையில் உள்ள புர்ஜ் கலிபா (830 மீட்டர், 2,723 அடி) ஆகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்