இலங்கை உள்நாட்டுப் போரின்போது போர்க்குற்ற புகார் பற்றி விசாரிக்க அடுத்த ஆண்டில் சிறப்பு நீதிமன்றம்

By ஏபி

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது நடந்த போர்க்குற்றம், மனித உரிமை மீறல் புகார் குறித்து விசாரிக்க அடுத்த ஆண்டில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில் ராணுவத் துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையே சுமார் 30 ஆண்டுகளாக நடைபெற்ற போர் கடந்த 2009-ல் முடிவுக்கு வந்தது. இந்த இறுதிக்கட்ட போரில் சுமார் 1 லட்சம் பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பலர் காணாமல் போயினர்.

இலங்கை அரசு மீதான போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், சர்வதேச பங்களிப்புடன் தாங்களே விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று ஐநா மனித உரிமை கவுன்சிலில் இலங்கை அரசு உறுதி அளித்திருந்தது.

இந்நிலையில், ஜெனிவா நகரில் ஐ.நா.மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பான விசாரணை மந்த கதியில் இருப்பதாக இந்தக் கவுன்சிலின் ஆணையர் ஜெயித் ராத் அல் ஹுசைன் கவலை தெரிவித்தார்.

இதையடுத்து, இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா, இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

இந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய சமரவீரா நேற்று கூறும்போது, “நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது. விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் நடந்ததாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கான திட்டம் தயாராகி வருகிறது. இதற்கு வரும் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சிறப்பு நீதிமன்றம் விசாரணையைத் தொடங்கும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

35 mins ago

உலகம்

3 hours ago

உலகம்

4 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்