ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 15-வது இடத்தைப் பிடித்துள்ளார். முதல்முறை மோடி இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் முதலிடத்திலும், அமெரிக்க அதிபர் ஒபாமா இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
உலகின் சக்திவாய்ந்த 72 மனிதர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டது. இதில் இந்தியப் பிரதமர் மோடி 15-வது இடத்திலுள்ளார். மோடியை 'இந்து தேசியவாதி' என்று வர்ணித்துள்ள ஃபோர்ப்ஸ், 2002-ம் ஆண்டு நடந்த குஜாராத் கலவரத்தையும் குறிப்பிட்டுள்ளது.
"குஜராத் மாநிலத்தை சீரமைத்தவர் என்ற பெருமையுடைய மோடியின் நிர்வாகம், இந்தியாவின் மற்ற பகுதிகளின் பொருளாதாரத்துக்கும் உயிரூட்டுவதாக நம்பிக்கையளிக்கிறது. இந்தியர்களைப் போலவே உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் மோடியின் நிர்வாகத்திறனை வியந்துள்ளனர். இதுவரை அமெரிக்கா, சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் அண்டை நாடுகளுக்கு மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்" என்று ஃபோர்ப்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் மேலும், இந்தியாவின் முகேஷ் அம்பானி 36-வது இடத்திலும், தொழிலதிபர் லக்ஷ்மி மிட்டல் 57-வது இடத்திலும், மைக்ரோசாப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா 64-வது இடத்திலும் உள்ளனர்.
இதே பட்டியலில் சென்ற வருடம் 21-வது இடத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயர், இந்த முறை பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற வருட பட்டியலைப் போலவே, இந்த வருடமும், புதின், ஒபாமாவோடு, முதல் ஐந்து இடங்களில் சீன அதிபர் ஜீ ஜிங்பிங், போப் பிரான்சிஸ் மற்றும் ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்செலா மெர்கல் ஆகியோர் முறையே 3, 4 மற்றும் 5-வது இடங்களில் இடம் பெற்றுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
3 mins ago
உலகம்
21 hours ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago