தாவூத் இப்ரஹிம் இங்கு இல்லை: பாகிஸ்தான் மறுப்பு

By செய்திப்பிரிவு

தாவூத் இப்ரஹிம் பாகிஸ்தானில் இல்லை என அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லாம், மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டேவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார்.

வெள்ளிக் கிழமை பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, தங்களுக்கு கிடைத்த தகவலின் படி தாவூத் இப்ரஹிம் பாகிஸ்தானில் தான் பதுங்கியிருக்கிறார் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லாம்: "தாவூத் இப்ரஹிம் பாகிஸ்தானில் இல்லை என்பதை பலமுறை நாங்கள் இந்தியாவிடம் தெரிவித்துள்ளோம். இதற்கு முன்பும் பல முறை இந்தியா இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. ஒவ்வொரு முறையும் நாங்கள் தீவிர சோதனை நடத்தி தாவூத் பாகிஸ்தானில் இல்லை என்பதை தெரிவித்திருக்கிறோம்" என்றார்.

1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக தாவூத் இப்ரஹிமை தீவிரவாத தடுப்பு போலீசார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

8 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்