கனடாவில் கியூபெக் நகரிலுள்ள மசூதியில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
இது குறித்து மசூதியின் நிர்வாகி முகமத் யான்ஹு கூறும்போது, "கியூபெக் நகரிலுள்ள மசூதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் மூவர், துப்பாக்கியால் திடீர் தாக்குதலை நடத்தினர். இதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
ஏன் அவர்கள் இந்தத் தாக்குதலை இங்கு நடத்தினார்கள், இது காட்டுமிராண்டிதனமான செயல்" என்று கூறினார்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், "துப்பாக்கிச் சூட்டில் நடந்தபோது மசூதியில் 40 பேர் இருந்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறினர்.
இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து கியூபெக் நகர போலீஸார் தங்களது ட்விட்டர் பக்கத்தில், "நிலைமை தற்போது கட்டுபாட்டில் உள்ளது" என்று பதிவிட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில், "மசூதியில் நடந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு கனடா மக்கள் வருந்துகின்றனர். துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரோடு நான் உடனிறுப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago