அமெரிக்க ராணுவ பெண் புகைப்பட கலைஞர் ஒருவர் தனது இறுதி தருணத்தின் போது எடுத்த புகைப்படம் நான்கு வருடங்களுக்குப் பிறகு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ராணுவ புகைப்படக் கலைஞர் ஹில்டா கிளேடன் (22), கடந்த 2013 ஆம் ஆண்டு ஆப்கனின் லக்மான் மாகாணத்தில் ஏற்பட்ட பீரங்கிக்குண்டு வெடிவிபத்தில் மரணமடைந்தார்.
கிளேடனுடன் ஆப்கனை சேர்ந்த நான்கு ராணுவ வீரர்களும் பலியாகினர். பீரங்கி குண்டுவெடிப்பில் கிளேடன் விபத்துக்குள்ளான போது அவரது கேமராவில் அவர் எடுத்த கடைசி புகைப்படத்தை அமெரிக்க ராணுவ திங்கட்கிழமை வெளியிட்டது.
இதுகுறித்து அமெரிக்க ராணுவம் தரப்பில், "ஹில்டா கிளேடனின் இம்மரணம் பெண் ராணுவ வீராங்கனைகள், ஆண் ராணுவ வீரர்களுடன் இணையாக போரின் அபாயகரமான சூழ்நிலைகளை எப்படி எதிர்க்கொள்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. கிளேடன் தனது கடைசி தருணத்தில் எடுத்த புகைப்படம் அவரது குடும்பத்தினரின் அனுமதியோடு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட காலம் போரின் முக்கிய தருணமாகும். அது அமெரிக்காவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆப்கானை உறுதிப்படுத்த ஆப்கன் வீரர்களும் எங்களுடன் இணைந்து செயல்பட்டனர்.
போரின் எந்தச் சூழ்நிலையிலும் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளைப் பதிவு செய்வதற்கு அமெரிக்க ராணுவ வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
ஆப்கன் போர்
ஆப்கானிஸ்தானில் 2010-ம் ஆண்டு தாலிபன்களுக்கு எதிராக அமெரிக்க - ஆப்கன் ராணுவ வீரர்கள் கடுமையாக சண்டையிட்டு வந்தனர். அக் காலக்கட்டங்களில் ஆப்கன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பலியாகினர்.
ஆனால் தற்போது அமெரிக்கப் படைகள் ஆப்கனிலிருந்து படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வருகிறது இதனால் ஆப்கனில் பெரும்பாலான பகுதிகள் மீண்டும் தாலிபன்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
26 mins ago
உலகம்
2 hours ago
உலகம்
4 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago