மாதம் ரூ.1.71 லட்சம் இலவசமாக வழங்க வாக்கெடுப்பு: 78% சுவிட்சர்லாந்து மக்கள் நிராகரிப்பு

By ஏஎஃப்பி

உலகிலேயே பணக்கார நாடான சுவிட்சர்லாந்தில் மக்களின் தனிநபர் வருவாய் அதிகமாக உள்ளது. மேலும், மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடாகவும் உள்ளது.

இந்நிலையில், சுவிட்சர்லாந்து குடி மக்கள் மற்றும் சட்டப்படி 5 ஆண்டுகள் தங்கி குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களுக்கு மாதம் 2,500 டாலர் இலவசமாக வழங்க அரசு பரிசீலித்து வந்தது.

வேலைக்கு சென்றாலும் செல்லாவிட்டாலும் ஒவ்வொரு குடிமகனுக்கும் நிரந்தர மாத சம்பளம் அளிக்கும் நோக்கில் இத் திட்டம் குறித்து பரிசீலித்து வந்தது. இத்திட்டத்தை அமல்படுத்தலாமா வேண்டாமா என்பது குறித்து நாட்டு மக்களிடம் சுவிஸ் அரசு நேற்று வாக்கெடுப்பு நடத்தியது.

இத்திட்டத்தை ஆதரிப்பவர்கள் கூறும்போது, “சுவிட்சர்லாந்தில் வறுமையில் உள்ளவர்கள் மற்றும் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக் காமல் திண்டாடுபவர்களுக்கு மாதம் 2,500 டாலர் (சுமார் ரூ.1,71,000) வருவாய்க்கு வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. வறுமை ஒழிப்புக்கு இத்திட்டம் பயன்படும்” என்றனர்.

இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கருத்தை சில அரசியல் சாரா அமைப்புகள் முன் வைத்திருந்தன. அந்த அமைப்புகள் கூறும்போது, “சுவிட்சர்லாந்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் 2,500 டாலர் அல்லது பிராங்க் (சுவிஸ் கரன்சி), குழந்தைகளுக்கு தலா 625 பிராங்க் வழங்கலாம்” என்று யோசனை தெரிவித்துள்ளது.

வரி உயரும்

ஆனால் இத்திட்டத்தை எதிர்ப் பவர்கள், ‘இத்திட்டம் மார்க்சிஸ்ட் கனவு’ என்று விமர்சித்துள்ளனர். இத்திட்டத்தை நிறைவேற்றினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும். இத்திட்டத்தை அமல்படுத்த ஆண்டுக்கு 25 பில்லியன் பிராங்க் தேவை என்று சுவிஸ் அரசு கணக்கிட்டுள்ளது. இந்த தொகையை சமாளிக்க வரி உயர்வு போன்ற திட்டங்களை அமல் படுத்த வேண்டியிருக்கும் என்று கூறுகின்றனர். பலர் வேலையை விட்டுவிடுவார்கள். பொருளாதாரம் பாதிக்கும் என்றும் எச்சரித் துள்ளனர்.

மேலும் சுவிஸ் எதிர்க்கட்சியினர் மற்றும் பல்வேறு நாட்டு அரசியல் கட்சியினரும் இத்திட்டத்தை எதிர்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து ஜெனீவா கிராஜுவேட் இன்ஸ்டிடியூட் பொருளாதார பேராசிரியர் சார்லஸ் வைப்லோஸ் கூறும் போது, “எந்த வேலையும் செய்யா மல் மக்களுக்கு நீங்கள் பணம் கொடுத்தால், அவர்கள் ஒன்றுமே செய்ய மாட்டார்கள்” என்று கூறி யுள்ளார்.

இது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று பிற்பகலில் முடிந்தது.வாக்குரிமை பெற்ற ஏராள மானோர் சனிக்கிழமை மாலை யிலேயே ஆர்வமுடன் வாக்களித் தனர். குறிப்பாக ஜெனீவாவில் 47.4 சதவீதம் வாக்காளர்கள் சனிக் கிழமை மாலை வாக்களித்தனர்.

இதற்கிடையில் 78 சதவீதம் மக்கள் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஓட்டெடுப்புக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் 70 சதவீத மக்கள் இதை புறக்கணித்தனர்” என்று தெரிவித்தனர். எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

மரபணு சோதனை

குடிமக்களுக்கு பணம் வழங்கும் திட்டம் தவிர, சிரியா போன்ற நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு தஞ்சம் அளிப்பது, செயற்கை கருவூட்டல் முறையில் கருப்பைக்குள் கருவை வைப்ப தற்கு முன் மரபணு சோதனைக்கு (கரு வழங்கியவர்களுக்கு பாரம் பரிய நோய் இருக்கிறதா என்பதை அறிய) அனுமதி வழங்கலாமா வேண்டாமா ஆகிய முக்கிய விஷயங்கள் குறித்தும் நேற்று சட்டப்படி வாக்கெடுப்பு நடத்தப் பட்டது.

இதில் மரபணு சோதனை நடத்த 61 சதவீதம் மக்கள் வாக்களித்தனர். மேலும் சிரியா போன்ற நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு தஞ்சம் அளிக்கும் விவகாரத்தில் சுவிஸ் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

33 mins ago

உலகம்

7 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

1 day ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

மேலும்