தூய எரிவாயுக்காக ஐஸ்லாந்து நாடு மிகப்பெரிய வேலையில் இறங்கியுள்ளது. அந்நாட்டின் முக்கிய நகரான ரெய்க்ஜாலித் அருகிலுள்ள கிராஃப்ளா எரிமலையின் தொடங்கப்பட்ட தோண்டும்பணி பூமியின் வெகுதூர ஆழத்தைநோக்கி போய்க்கொண்டிருக்கிறது.
இந்த எரிமலைப் பகுதிகளில் நடத்தப்படும் இந்த பரிசோதனை திட்டம் மட்டும் வெற்றியடைந்துவிட்டால் வழக்கத்தைவிட 10 மடங்கு அதிக எரிவாயு அல்லது கச்சா எண்ணெய் எடுக்கமுடியும் என்று கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 3 மைல்கள் ஆழம்
இந்த ஆண்டு ஜனவரி 25ல் தொடங்கப்பட்ட இந்த மலையைக் குடையும் பணி 4,659 மீட்டர் தூர (கிட்டத்தட்ட 3 மைல்கள்) ஆழத்திற்குச் சென்றுள்ளது, இதுவரை நடந்த அந்த மாதிரிப் பணிகளில் ஒரு முறியடிக்கப்பட்ட சாதனையாகக் கருதப்படுகிறது.
ஐஸ்லாந்தின் இந்த திட்டம் பூமியின் உள்ளிருந்து கிடைக்கும் வெப்ப ஆற்றலிலிருந்து கிடைக்கும் எரிசக்தியை எடுக்கும் ஒரு முயற்சியாகும். எரிவாயு தேவையின் பொருட்டு எரிமலைப் பள்ளத்தாக்கில் தோண்டும் இதற்கான உத்தி புவிவெப்ப ஆற்றல் பெறப்பட்ட 70களின் பாணியைப் பின்பற்றியே நடைபெற்று வருகிறது.
தோண்டப்பட்டுவரும் புதிய புவிவெப்பக் கிணறுகளில் பெருமளவில் எரிவாயு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆழத்தில் செலுத்தப்படும் இதற்கான உச்சபட்ச வெப்பத்திலும் அழுத்தத்திலும் கிடைக்கும் நீர் ஒருவகை உயர்அழுத்த திரவமாகும். இது வாயு அல்லது திரவ வடிவத்தில் இருக்கும். இதை அறிவியலார்கள் 'சூப்பர்கிரிடிக்கல் திரவம்' என்றே அழைக்கின்றனர்.
"இக்காலத்தில் கிடைத்துவரும் எரிவாயுவைவிட பத்து மடங்கு அதிகமான சக்தியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று தோண்டுதல் திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஐஸ்லாந்து எரிசக்தி நிறுவனமான HS ஓர்காவின் பொறியியலாளர் ஆல்பர்ட் அல்பெர்ட்ஸ்சன் கூறினார்.
2.12 லட்சம் மக்களுக்கு குடிநீர் விநியோகம்
எரிவாயு கிணறுகள் தோண்டுவது குறித்து ஆல்பர்ட் அல்பெர்ட்ஸ்சன் மேலும் கூறுகையில்,
ரெய்க்ஜாலித் நகரத்தில் வசிக்கும் 2,12,000 மக்களுக்கும் மின்சாரம் மற்றும் கொதிநீரை வழங்க,' மூன்று அல்லது ஐந்து வரையிலான உயரழுத்த கிணறுகளை ஒப்பிடுகையில் நாங்கள் 30 லிருந்து 35 வரையிலான சாதாரண வகையிலான உயர் வெப்பநிலை கிணறுகளை தோண்டவேண்டியுள்ளது. இதற்கு நிறைய செலவு ஆகாது.
வெற்றியை நோக்கிய முயற்சிகளோடுதான் விஞ்ஞானிகளும் சில குழுக்களும் ''தோர்'' எனப்படும் தோண்டும் திட்டத்தில் இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்கள். இந்த பரிசோதனை முயற்சிக்குத் தேவையான பொருளாதார தேவைகளுக்காகவே ஏற்படுத்தப்பட்டதுதான் 'ஐஸ்லாண்ட் டீப் டிரில்லிங் புரொஜெக்ட்' (IDDP).
இந்த இடம் புளூ லாகூன் நகரத்திலிருந்து நீண்ட தொலைவில் இல்லை. கடந்த ஆண்டு மட்டும் இங்கு கிடைக்கும் நீலநிற தண்ணீரிலிருந்து உருவாகும் நீராவியில் குளித்துமகிழ ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்துள்ளனர். 700 ஆண்டுகளுக்கு முன் கடைசியாக ஏற்பட்ட எரிமலைக்குழம்பு வெடிப்பு ஒரு பெரும் பள்ளத்தை உருவாக்கியது. பின்னர்தான் ரெய்க்ஜான்ஸ் தீபகற்பத்தின் இந்த பெரும்நிலப்பரப்பே எரிமலை லாவாக்கடல் மூடியுள்ளப் பகுதியாக உருமாறியது.
ஒரு வட்டநிலவைப் போன்ற வடிவமைப்பில் இந்த தீபகற்ப இந்நிலப்பகுதியை நோக்கி 1965, 1967 வருடங்களில் நாசாவின் ஆய்வுப் பயிற்சிக் குழுவினரும் வந்தனர். அறியப்படாத நிலங்களுக்கு அழைத்துச் சென்று சந்திர மண்டலத்துக்குச் செல்லும் வகையில் விண்வெளி வீரர்களை தயார் செய்யும் நோக்கத்துடன் அக்குழு வந்தது.
100% புதுப்பிக்கத்தக்க மின்சாரம்
ஒரு நார்டிக் தீவு நாடு, செழிப்பாக ஊற்றெடுக்கும் வெந்நீர் ஊற்றுக்கள் நீரும் நீராவியுமாக பீறிட்டெழுகின்றன. எரிமலைகள் விடும் மூச்சாகவே சூடான நீரூற்றுகள் அமைந்துள்ளன. 100 சதவீத புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை பெற்றுள்ள ஒரே நாடு ஐஸ்லாந்து மட்டுமே. புவிவெப்ப மின்உற்பத்தி 25 சதவீதமும் மீதமுள்ள 75 சதவீதம் மின்சாரம் பிற நீர்மின் உற்பத்தி அணைகளிலிருந்து பெறப்படுகிறது.
தூய்மையான எரிசக்தி ஐஸ்லாந்து ஒரு முன்மாதிரியாகுமா?
இதற்கான பதில் மிகவும் சிக்கலானது. இதற்கு பதிலளித்துப் பேசிய நார்வேயைச் சேர்ந்த கிரீன்பீஸ் நிதி வல்லுநர் மார்டின் நார்மன், ''புவிவெப்ப ஆற்றலின் எரிசக்தி விரும்பத்தக்கது என்றாலும் பூமியிலிருந்து பெறப்படும் நிலக்கரியும் எண்ணெயும் எந்தப் பிரச்சனையுமின்றி முற்றிலுமாக புதுப்பிக்கத்தக்கது அல்ல.
விரைவில் இந்த எரிமலைத் தோண்டுதலினால் உருவாகும் பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கத்தான் போகிறீர்கள். சல்ஃபர் டை ஆக்ஸைடு மற்றும் கார்பன் டை ஆக்ஸைடுகளின் மாசு வெளியாவதைத் தடுக்க விரைவில் நீங்கள் தீர்வு கண்டாக வேண்டும். எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியை ஒப்பிடும்போது இப்பிரச்சனை சிறு பகுதிதான். இவற்றைக் கட்டுப்படுத்த மறுசுழற்சி முறைகள் நடைமுறைப்படுத்துவதில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
ஐஸ்லாந்தைப் பொறுத்தவரை புதுப்பிக்கத்தக்க எரிவாயு உற்பத்தியில் முன்னணியில் நிற்கிறது என்பது பெருமைக்குரிய ஒன்று. அதேநேரத்தில் பசுமைஇல்ல வாயு வெளியேற்றத்தை குறைப்பதில் உலகளாவிய இலக்கில் இந்நாடு வெகுதொலைவில் உள்ளது.
ஐஸ்லாந்து நாடு, 2015ல் பாரீஸில் நடைபெற்ற பருவநிலை மாற்றத்திற்கான உடன்படிக்கையில் கையொப்பமிட்டது. ஆனால் அதைப் பின்பற்ற முடியாத நிலையில் உள்ளதென ஐஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் உள்ள பொருளாதாரக் கல்வியியல் துறை வெளியிட்டுள்ள பிரப்ரவரி ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. மீன்பிடித் தொழில் மற்றும் விவசாயத்தைத் தவிர, பொருளாதாரத்தின் அனைத்துத்துறைகளிலும் பசுமைஇல்ல வாயு உமிழ்வுகள் பெருகிவருகிறது. ஐஸ்லாந்தைப் பொறுத்தவரை இதை சிறப்புக்கவனம் எடுத்து இதைத் தடுக்க போதிய முயற்சிகளில் இறங்கவேண்டும்'' என்றார்.
தமிழில்: பால்நிலவன்
முக்கிய செய்திகள்
உலகம்
26 mins ago
உலகம்
6 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago