ஹாங்காங்கில் முழு நிர்வாக சுதந்திரம் கோரி சீன அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருபவர்களுக்கும், காவல் துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் வைத்திருந்த சாலைத் தடுப்புகளை காவல்துறையினர் அகற்றியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஹாங்காங்கிலுள்ள மத்திய வர்த்த மாவட்டத்தில் போராட்டக் காரர்கள் வைத்திருந்த சாலைத் தடுப்புகளில் சிலவற்றை அகற்றிய காவல்துறையினர் போராட்டப் பகுதியை சுருக்கினர். இதைத்தொடர்ந்து போராட்டக் காரர்கள் முகமூடியை அணிந்து கொண்டு சாலைத் தடுப்புகளைத் தாண்டி இறங்கினர். அப்போது, காவல்துறைக்கும் அவர் களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தங்கள் மீது, ஒரு வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்துவதாக, போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஜனநாயகத்துக்கு ஆதரவாக, ஹாங்காங்கில் நிர்வாகச் சுதந்திரம் கோரி போராட்டம் நடத்து வதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.“மத்தியை ஆக்கிர மிப்போம்” இயக்கம் சட்ட விரோதமானது எனக் கோஷமிடும் அவர்கள், சாலைத் தடுப்புகளை அகற்றி போக்குவரத்துக்கு வழிவிட வேண்டும் என வலியு றுத்தி வருகின்றனர். எனவே காவல்துறையினர் சாலைத் தடுப்புகளை அகற்றி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago