பித்துப்பிடித்தவரிடம் அணு ஆயுதங்கள்: கிம்மை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப்

By ஏஎஃப்பி

'பித்துப்பிடித்தவரிடம் அணுஆயுதங்கள்'என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்-னை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட்வுடனான தொலைபேசி உரையாடலின்போது ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்தகாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சில நாட்களுக்கு முன்னர்தான் தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்திவரும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்-னை சந்திக்கத் தயார் என்றும் அவருடனான சந்திப்பை கவுரமாக கருதுவதாகவும் ட்ரம்ப் கூறியிருந்தார்.

இந்த நிலையில் வடகொரிய அதிபர் கிம்மை ட்ரம்ப் பித்துப்பிடித்தவர் என்று விமர்சித்ததாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் அதிபர் டியுடெர்டியுடன், "அணுஆயுதங்களை வைத்திருக்கும் பித்துபிடித்த ஒருவரால் நாம் சோர்வடைய அனுமதிக்கக் கூடாது. நம்மிடம் அவரை விட கூடுதலான சக்தி உள்ளது. ஆனால் நாம் அதனை பயன்படுத்தவில்லை" என்று ட்ரம்ப் கூறியிருக்கிறார்.

மேலும் கிம் மனநலம் சீராக இருக்கிறதா....? என்று ட்ரம்ப் கேட்க அதற்கு டியுடெர்ட், "அவரது புத்தி வேலை செய்யவில்லை. சில நேரங்கங்களில் பித்துப்பிடித்தவரைப் போலவே நடந்து கொள்கிறார்" என்று கூறுவதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

உலக நாடுகளின் தொடர் எதிர்ப்புக்கு மத்தியில் அணுஆயுத ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது.

வடகொரியாவின் இந்த செயல்பாட்டுக்கு ஐ. நா. கடுமையாக கண்டனம் தெரிவித்தது. வடகொரியாவின் இந்தச் செயல்பாட்டை தடுக்க சீனா உதவும். இல்லையேல் அதனை நாங்கள் செய்வோம் என்று அமெரிக்கா எச்சரித்தது.

ஆனால் எதனையும் பொருட்படுத்தாமல் வடகொரியா செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

1 day ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

மேலும்