உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய தலையீடு: பிரிட்டன் பிரதமருடன் அமெரிக்க அதிபர் ஆலோசனை

By செய்திப்பிரிவு

உக்ரைனில் ரஷ்ய அதிபர் புதின் படைகளை அனுப்பியிருக்கும் விவகாரம் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆலோசனை நடத்தினார்.

பிரிட்டன் பிரதமரும் அமெரிக்க அதிபரும் நடத்திய தொலைபேசி உரையாடலில், உக்ரைனின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் ரஷ்யா செயல்பட்டு வருவது தொடர்பாக தங்களின் கவலையை பகிர்ந்து கொண்டனர்.

ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு சார்பில் உக்ரைனில் ராணுவ கண் காணிப்பை மேற்கொள்ளும் நடவடிக்கையை கேமரூனும் ஒபாமாவும் வரவேற்றுள்ளனர். பொருளாதாரத்தை மேம்படுத்து வதிலும், மே மாதம் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாகவும் உக்ரைன் அரசுக்கு அனைத்து வகையிலும் உதவ இரு தலைவர்களும் முன் வந்துள்ளனர்.

இதற்கிடையே உக்ரைனுக்குள் படைகளை அனுப்பிய ரஷ்ய நடவடிக்கைகளை கண்டித்து உண்மை கண்டறியும் அறிக் கையை அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது.

உக்ரைனில் ரஷ்ய ஆதரவு மக்கள் ஆயுதம் ஏந்தி போராடுகின் றனர் என்று புதின் கூறியிருந்தார். இதை மறுத்துள்ள அமெரிக்கா, அங்கிருப்பது ரஷ்ய வீர்ரகள்தான் என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் மாளிகை செயலாளர் ஜே கார்னே கூறுகையில், “உக்ரைனின் இறை யாண்மையை பாதிக்கும் வகையில் செயல்படும் ரஷ்யாவுக்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்நாட்டுக்கு பொரு ளாதார ரீதியான உதவிகளை செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

உக்ரைனின் கிழக்குப் பகுதியிலும், கிரிமியா பகுதியி லும் நிகழ்ந்து வரும் ராணுவ நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்” என்றார்.

பேச்சு நடத்த அறிவுரை

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறுகையில், “உக்ரைனிலிருந்து ரஷ்யா தனது படைகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். உக்ரைன் அரசுடன் ரஷ்ய அரசு பேச்சு நடத்த வேண்டும். உக்ரைனை பொறுத்தவரை ரஷ்யா தவறான பாதையில் சென்று கொண்டுள்ளது. இதை அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சரிடமே தெரிவித்து விட்டேன்” என்றார்.

தற்போது பிரான்ஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் ஜான் கெர்ரி, அந்நாட்டு அமைச்சர்களுடனும் அரசியல் தலைவர்களுடனும் பேச்சு நடத்தி வருகிறார்.

நாஜிகளை நினைவுபடுத்தும் புதின்

அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியதாவது: “தவறாக புரிந்துகொள்ளப்படக் கூடிய வகையிலான நடவடிக்கைகளை அனைத்து தரப்பினரும் கைவிட வேண்டும். ரஷ்ய அதிபர் புதினின் செயல்பாடு (உக்ரைனுக்கு ராணுவத்தை அனுப்பியது) ஹிட்லரின் தலைமையிலான நாஜிப் படையினர் செக்கோஸ் லோவேகியா, ருமேனியாவுக்கு சென்றதை நினைவுபடுத்துகிறது.

1930-களில் போலந்து, செக்கோஸ்லோவேகியா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஜெர்மானியர்களை காப்பதற்காக அந்நாடுகள் மீது போர் தொடுப்பதாக நாஜிகள் காரணம் கூறினர். இப்போது அதேபோன்று ரஷ்யர்களை காப்பதற்காக உக்ரைனின் கிரிமியா பகுதிக்குள் படைகளை அனுப்பியிருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் கூறி வருகிறார்.

ஐரோப்பாவில் நிகழும் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தும் வகையிலும் புதின் செயல்பட்டு வருகிறார்” என்றார் ஹிலாரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

1 hour ago

உலகம்

3 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்