கற்காலத்துக்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கும் தலிபான்: பாக். மக்கள் கட்சித் தலைவர் பிலாவல்

இஸ்லாம் மதத்தின் பெயரால் பாகிஸ்தானை கற்காலத்துக்கு அழைத்துச் செல்ல தலிபான் தீவிரவாத அமைப்பு முயற்சிப்பதாக பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் புட்டோ ஜர்தாரி கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற தலிபான்களின் கோரிக்கை குறித்து கருத்து தெரிவிக்கையில் பிலாவல் இவ்வாறு கூறினார்.

சிந்து மாகாணத்தில் நடை பெற்ற விழா ஒன்றில் பிலாவல் ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது: “தீவிரவாதச் சட்டத்தை நாட் டில் அமல்படுத்த தலிபான் முயற்சிக் கிறது. நீங்கள் (தலிபான்கள்) பாகிஸ்தானில் வாழ விரும்பினால், இந்த நாட்டின் அரசியலமைப்புச் சாசனத்தைத்தான் பின்பற்ற வேண்டும்.

தீவிரவாதிகள் கொண்டு வரும் சட்டத்தை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இஸ்லாம் மதத்தின் பெயரால் நாட்டை கற்காலத்துக்கு அழைத் துச் செல்ல நடக்கும் முயற்சியை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். முஸ்லிம்களாகிய எங்களுக்கு இஸ்லாம் மதத்தை போதிக்க தலிபான்கள் முயற்சிக்க வேண்டாம்.

ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில் தலிபான்கள் நிகழ்த்திய வன்முறையை அனைவரும் அறிவார்கள். அத்தகைய தலிபான்களுடன் அரசு பேச்சு நடத்த முயற்சிக்கிறது. இந்த பேச்சுவார்த்தைகளின் விளைவு எப்படி இருக்கும் என்பது எனக் குத் தெரியும். இதன் மூலம் எந்த பயனும் இல்லை” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE