அமெரிக்கா தலைமையிலான கூட்டு ராணுவ படைகளுக்கு உளவு பார்ப்பதாக சந்தேகித்து, சொந்த அமைப்பைச் சேர்ந்த ஏராளமான வர்களை கொன்று வருகிறது ஐஎஸ் தீவிரவாத அமைப்பு.
கடந்த மார்ச் மாதம், ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் மூத்த தளபதி அபு ஹாய்ஜா அல் துன்ஸி வடக்கு சிரியாவில் ஜீப்பில் சென்ற போது, அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப் பட்டார்.
இது, ஐஎஸ் அமைப்பில் பீதியை உருவாக்கியது. தங்களது அமைப் பில் கூட்டுப்படைகளுக்கு தகவல் சொல்லும் உளவாளிகள் இருக்கக் கூடும் என அஞ்சியது. அதற்குப் பிறகு, உளவாளிகள் என்ற சந்தேகத்தின்பேரில் தனது அமைப்பைச் சேர்ந்த 38 பேரைக் கொன்றுள்ளது ஐஎஸ் அமைப்பு.
ஐஎஸ் அமைப்பின் போர் அமைச்சர் என அழைக்கப்பட்ட ஒமர் அல் ஷிஷானி, இராக் தீவிர வாதி ஷாகெர் வுஹயெப் (எ) அபு வாஹிப், நிதி நிர்வாகி ஹஜி இமால் என பல முக்கிய தலைவர்களை அமெரிக்க ராணுவம் கடந்த சில மாதங்களில் கொன்றுள்ளது.
“விமான தாக்குதலில் கொல்லப் படலாம் என அஞ்சுவதால் ஐஎஸ் தளபதிகள் இராக்கிலிருந்து சிரியா வருவதற்கு பயப்படுகின்றனர்” என சிரியா எதிர்க்கட்சி செயற் பாட்டாளர் பெபர்ஸ் அல் தலாவி தெரிவித்துள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்த சிரியா மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் ரமி அப்துர் ரகுமான் கூறும்போது, “ஐஎஸ் அமைப்பில் சம்பளம் வெகுவாக குறைக்கப் பட்டு விட்டது. இதனால், அந்த அமைப்பில் உள்ளவர்களில் சிலர் பணத்துக்காக, அமைப்பு தளபதிகளின் நடமாட்டம், போர் திட்டம் போன்ற தகவல்களை கூட்டுப் படைகளுக்கு அளித்து வருகின்றனர்” என்றார்.
“அல் அன்பாரி கொல்லப்பட்ட பின்னர், 7 அல்லது 8 ஐஎஸ் அதிகாரிகள் மொசூல் கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்களின் நிலை என்னவானது எனத் தெரியவில்லை” என்று இராக் அரசுக்காக ஐஎஸ்ஸில் பணியாற் றும் உளவாளி ஒருவர் தெரிவித்தார். மொசூல் நகரில், உளவாளிகள் எனச் சந்தேகிக்கப்பட்ட ஏராளமான ஐஎஸ் தீவிரவாதிகளும், பொது மக்களும் ஆசிட் தொட்டிக்குள் மூழ் கடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் களை யெடுப்பு என்ற பெயரில் சொந்த உறுப்பினர்களே கொல்லப் படுவதால், சில உறுப்பினர்கள் மற்றும் தளபதிகள் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்து வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
56 mins ago
உலகம்
3 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago