பாகிஸ்தானில் மாயமாகும் சமூக ஆர்வலர்கள்: ஐ.நா. கவலை

By ஏஎஃப்பி

பாகிஸ்தானில் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து மாயமாகி வருவதற்கு ஐ.நா. தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த சமர் அப்பாஸ் சமூக ஆர்வலர். தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரிந்துவருகிறார்.

சமர் பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக தொடர்ந்து 'சிவில் முற்போக்கு கூட்டணி பாகிஸ்தான்' என்ற அமைப்பின் மூலம் குரல் கொடுத்து வந்தவர். இந்த நிலையில் சமர் அப்பாஸ் கடந்த வாரம் திடீரென மாயமாகியிருக்கிறார்.

இதுகுறித்து சமரின் சக பணியாளர் சையத் தலிப் அப்பாஸ் கூறும்போது, "கடந்த ஜனவரி 7-ம் தேதி கராச்சியிலிருந்து தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு சமர் வந்தார். அன்றிலிருந்து அவரைக் காணவில்லை. நாங்கள் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக 'சிவில் முற்போக்கு கூட்டணி பாகிஸ்தான்' என்ற அமைப்பை உருவாக்கி தொடர்ந்து அதற்காக குரல் கொடுத்து வந்தோம்" என்றார்.

சமர் மாயமானதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் சமூக ஆர்வலர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானில் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து மாயமாகி வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபை தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, சமூக வலைதளங்களில் எழுதிவரும் இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பதிவர்கள் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளிலிருந்து திடீரென காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

4 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்