சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டு ராணுவத்தின் வான்வழித் தாக்குதலையும் மீறி, ஐஎஸ் (இஸ்லாமிக் ஸ்டேட்) இயக்கத்தின் படை கோபனி நகரில் முன்னேறி வருகிறது. அதைத் தடுத்து நிறுத்துவது தொடர்பாக ராணுவ தளபதிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
சிரியாவில், அமெரிக்கா தலைமையில், ஆஸ்திரேலியா, பஹ்ரைன், பெல்ஜியம், பிரிட்டன், கனடா, டென்மார்க், எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி, இராக், இத்தாலி, ஜோர்டான், குவைத், லெபனான், நெதர்லாந்து, நியூஸிலாந்து, கத்தார், சவுதி அரேபியா, ஸ்பெயின், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான கூட்டு ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
கடந்த மூன்று வாரங்களாக, வான்வழித் தாக்குதல் மூலம் ஐஎஸ் படையினரை முன்னேற விடாமல் தடுக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இருப்பினும், துருக்கி எல்லையில் உள்ள கோபனி நகரில் பாதியை ஐஎஸ் அமைப்பு கைப்பற்றியுள்ளது.
இதைத் தொடர்ந்து, வாஷிங்டனில் ராணுவத் தளபதிகள் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர். மேலும் அதிபர் ஒபாமாவிடமும் இதுதொடர்பாக ராணுவ உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர். இந்த ராணுவக் கூட்டமைப்பு உருவான பிறகு, பல்வேறு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் கூடி ஆலோசிப்பது இதுவே முதல் முறை. தற்போது இக்கூட்டமைப்பில் 60 நாடுகள் இணைந்துள்ளன.
துருக்கி – சிரியா எல்லையில் ராணுவ தடுப்பு பகுதியை ஏற்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இருப்பினும், இதற்கு உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளிக்கவில்லை. ‘ஐஎஸ் படைகள் கோபன் நகரத்தின் தெற்கு, கிழக்கு, மேற்குப் பகுதிகளை முற்றுகையிட்டுள்ளன. துருக்கி எல்லையிலுள்ள வடக்குப் பகுதியைக் கைப்பற்றினால் படுகொலை நிகழும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்’, என தற்போது அகதியாக இருக்கும் கோபனைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago