உலகின் முதல் முகமாற்று அறுவை கிகிச்சை செய்த பெண் மரணம்

By ஏபி

உலகில் முதல்முறையாக முகமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இஸபெல்லா டைனோரி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 49.

பாரீஸ் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த இஸபெல்லா கடந்த ஏப்ரல் மாதமே மரணம் அடைந்திருக்கிறார். ஆனால் மருத்துவமனை தற்போதுதான் இஸபெல்லாவின் மரண செய்தியை வெளியிட்டுள்ளது.

இஸபெல்லாவின் குடும்பத்தின் வேண்டுகோளுக்கிணங்க மருத்துவமனை நிர்வாகத்தினர் இஸபெல்லாவின் இறப்பு செய்தியை மறைத்ததாக விளக்கம் அளித்துள்ளனர்.

மருத்துவ உலகில் திருப்புமுனையை ஏற்படுத்திய முதல் முகமாற்று அறுவை சிகிச்சை

கடந்த 2005 ஆம் நாய் கடித்ததில் தனது முகத்தின் முக்கிய உறுப்புகளை இழந்தார் இஸபெல்லா. இதனையடுத்து இஸபெல்லாவுக்கு முகமாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.

மருத்துவர்கள் பெர்னார்ட் டிவைச்சில்ல, ஜீன் மைக்கெல் டூபர்னர்ட் தலைமையில் சுமார் 15 மணி நேரம் முகமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையில் இஸபெல்லாவுக்கு வேறோரு நபரிடமிருந்து பெறப்பட்ட மூக்கு, கண்ணம், உதடு போன்ற உறுப்புகள் பொருத்தப்பட்டது. இம் முகமாற்று அறுவை சிகிச்சை மருத்துவ உலகில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இந்த முகமாற்று அறுவை சிகிச்சையின் மூலம் இஸபெல்லா உலகம் அறியும் நபராக அடையாளம் காணப்பட்டார்.

இஸபெல்லாவின் அறுவை சிகிச்சையை தொடர்ந்துதான் முகமாற்று சிகிச்சைகள் பரவலாக செய்யபட்டன.இதுவரை 36 முகமாற்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன அதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

புகைப்பிடிக்கும் பழக்க கொண்ட இஸபெல்ல நுரையிரல் புற்று நோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்த நிலையில்தான் இஸபெல்ல மரணம் அடைந்துள்ளார். மரணம் அடைந்த இஸபெல்லாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது முகமாற்று அறுவை சிகிச்சையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ஆவணப்படம் மிகவும் பிரபலமானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்