பாகிஸ்தான் நிலப்பகுதி வழியாக ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி கோரி உள்ளது. இதற்கு பாகிஸ்தானின் மாவு மில் உரிமையாளர் கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பல லட்சம் டன் கோதுமையை ஆப்கனுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக பாகிஸ்தான் நிலப்பகுதி வழியாக கோதுமையை அனுப்பி வைக்க அந்நாட்டு அரசிடம் அனுமதி கோரி உள்ளது. இந்நிலையில் இதற்கு அனுமதி வழங்கக் கூடாது என பிரதமர் நவாஸ் ஷெரிப் தலைமையிலான அரசுக்கு உள்ளூர் கோதுமை மாவு மில் உரிமை யாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவ்வாறு அனுமதி வழங்கினால் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இந்தியாவிலி ருந்து இறக்குமதியாகும் 1 டன் கோதுமை விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ரூ.2,900 ஆக இருக்கிறது. அதேநேரம் பாகிஸ்தான் கோதுமை விலை ரூ.3,400 ஆக உள்ளது.
இந்த விலை வித்தியாசம் காரணமாக, பாகிஸ்தானிலிருந்து ஆப்கனுக்கு ஏற்றுமதியாகும் கோதுமை மாவுக்கான சந்தை பாதிக்கப்படும் என அவர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாகவே, பாகிஸ்தான் வழியாக கோதுமை ஏற்றுமதி செய்ய இந்தியாவுக்கு அனுமதி வழங்க அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
7 hours ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago