இராக்கில் குண்டு வெடிப்பு 41 பேர் உயிரிழந்தனர்

By செய்திப்பிரிவு

இராக்கில் நேற்று நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 41 பேர் உயிரிழந்தனர். தலைநகர் பாக்தாத்தின் வடபகுதியில் உள்ள புக்ரிஸ் நகரில் அல்-காய்தாவுக்கு எதிரான பயங்கரவாத இயக்கத் தலைவரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 25 பேர் உயிரிழந்தனர்.

பாக்தாத்தில் மக்கள் அதிகம் கூடும் சந்தைப் பகுதி, கடைகள், உள்ளிட்ட இடங்களிலும், சாலை யோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்களிலும் தொடர்ந்து சில குண்டுகள் வெடித்தன. இதில் 16 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் படுகாயமடைந்தனர். எனினும் இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இராக்கில் ஷியா முஸ்லிம்களை குறிவைத்தும், ராணுவத்தினர் மற்றும் போலீஸாரை குறி வைத்தும் அல் காய்தா பயங்கர வாதிகளும், அவர்களது துணை அமைப்பினரும் தாக்குதல் நடத்து வது தொடர்ந்து வருகிறது. இது அந்நாட்டு அரசுக்கு பெரும் சவலான பிரச்னையாக உள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து இப்போதுவரை இராக்கில் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பயங்கரவாத சம்பவங்களில் இது வரை 8 ஆயிரத்து 868 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

14 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

மேலும்