கூகுள் கண்ணாடி அணிந்து வாகனம் ஓட்டுவது தவறில்லை: கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

கூகுள் கிளாஸ் அணிந்தபடி வாகனம் ஓட்டியவர் மீது போக்குவரத்து காவல்துறை தொடர்ந்த வழக்கை, கலிபோர்னியா போக்கு வரத்து நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் முன்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட 30 ஆயிரம் பேருக்கு கூகுள் கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பயன்படுத்தி, அதன் நிறை குறைகளை கூகுள் நிறுவனத்துக்குத் தெரிவிப்பர். இவ்வாறு புதிய பொருள்களை பரீட்சார்த்த முறையில் துருவி ஆராய்பவர்களுக்கு எக்ஸ்புளோரர் என்று பெயர்.

செசிலியா அபாடியே என்பவர் இவ்வகையிலான எக்ஸ்புளோரர்களுள் ஒருவர். இவர், கடந்த அக்டோபர் மாதம் கூகுள் கிளாஸ் அணிந்தபடி வாகனம் ஓட்டியதற்காக, கலிபோர்னியா போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். வாகனம் ஓட்டும்போது டி.வி. அல்லது வீடியோ பார்ப்பது குற்றம் என்ற சட்டப்பிரிவின் கீழ் இவ்வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை எதிர்த்து கலிபோர்னியா போக்குவரத்து நீதிமன்றத்தில் செசிலியா அபாடியே வழக்கு தொடர்ந்தார். வாகனம் ஓட்டும்போது கூகுள் கிளாஸ் கருவி பயன்பாட்டில் இல்லை என அவர் வாதிட்டார்.

வாகனம் ஓட்டும்போது கவனக்குறைவை ஏற்படுத்தும் எவ்வகையான உபகரணமும் அல்லது செயலும் அபாயகரமானது என்று போக்குவரத்து போலீஸார் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், வாகனம் ஓட்டும் போது கூகுள் கிளாஸ் செயல்பாட்டில் இல்லை என்பதால், செசிலியாவுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப் பளித்தது.

டெலாவர், நியூஜெர்ஸி மேற்கு விர்ஜீனியா ஆகிய மாகாணங்களில் வாகனம் ஓட்டும்போது கூகுள் கிளாஸ் அணிவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்பதற்கான மசோதாவை, அம்மாகாண சட்டப் பேரவை உறுப்பினர்கள் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கூகுள் கிளாஸ் என்பது மின்னஞ் சல், வீடியோ, வரைபடங்கள், தொலைபேசி அழைப்புகள் என அனைத்து வசதிகளையும் கொண்ட கண்ணில் அணியும் குட்டி கணினி ஆகும். வலது கண் அருகே இருக்கும் மிகச்சிறிய திரையை கண்ணசைவிலும், குரல் மூலமும் இயக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

18 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்