அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு 2 மாணவர்கள் பலி

By செய்திப்பிரிவு

அமெரிக்கா ஹூஸ்டன் நகரில் 18 வயது பூர்த்தியாகும் சில பெண்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், ஒரு இளைஞர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.

கடந்த சனிக்கிழமை இரவு 18 வது பிறந்தநாளைக் கொண்டாடும் பெண்கள் சார்பில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 17 முதல் 19 வயது வரை உள்ள 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

அப்போது, ஓர் இளைஞர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். மற்றொரு நபர் கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினார். இதனால் அலறியடித்தபடி கூட்டத்தினர் குறுகிய பாதை வழியாக வெளியேற முயன்றனர். சிலர் ஜன்னல் வழியாக 2ஆவது தளத்தில் இருந்து கீழே குதித்தனர்.

துப்பாக்கியால் சுட்டதில் சைப்ரஸ் ஸ்பிரிங்ஸ் பள்ளியைச் சேர்ந்த 18 வயது மாணவனும், 16 வயது மாணவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 16 பேருக்கு குண்டு காயம் ஏற்பட்டது. நான்கு பேருக்கு எலும்பு முறிவு மற்றும் காயங்கள் ஏற்பட்டன.

துப்பாக்கியால் சுட்ட இரு நபர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்