அதிக மக்கள்தொகை: 2050-ல் இந்தியா முதலிடம்

By செய்திப்பிரிவு

2050-ம் ஆண்டில் அதிக மக்கள்தொகையுள்ள முதல் நாடாக இந்தியா மாறும். அப்போது இந்திய மக்கள்தொகை 160 கோடியாக இருக்கும்.

பிரான்ஸ் நாட்டு மக்கள்தொகை ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட புதிய ஆய்வின் அடிப்படையில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது, மக்கள்தொகையில் சீனா (130 கோடி) முதலிடத்தில் உள்ளது. 2050-ம் ஆண்டிலும் சீன மக்கள்தொகை 130 கோடியாகவே தொடரும். அதே நேரத்தில், இப்போது 120 கோடியாக உள்ள இந்தியாவின் மக்கள்தொகை 160 கோடியாக அதிகரிக்கும்.

கடந்த ஜூன் மாதத்தில் ஐ.நா. மேற்கொண்ட ஆய்வில் 2050-ம் ஆண்டில் உலக மக்கள்தொகை 960 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.

இப்போது முதலிடத்தில் உள்ள சீனாவின் மக்கள்தொகை 130 கோடி. இந்திய மக்கள்தொகை 120 கோடி. இதற்கு அடுத்த இடங்களில் அமெரிக்கா (31.62 கோடி), இந்தோனேசியா (24.85 கோடி), பிரேசில் (19.55 கோடி) ஆகிய நாடுகள் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்