இத்தாலியில் 4 முறை நிலநடுக்கம்: பனிச்சரிவில் ஓட்டல் புதைந்து 30 பேர் பலி

By ஏபி

இத்தாலியில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பரின்டோலா பகுதி ஓட்டல் பனிச்சரிவில் புதைந்து 30 பேர் பலியாகினர்.

இத்தாலி பனிச்சரிவு

மத்திய இத்தாலி பகுதியில் கடந்த புதன்கிழமை அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கிரான் சாஸோ மலைப் பகுதியில் பரின்டோலாவில் அமைந்துள்ள ஓட்டல் பனிச்சரிவில் புதைந்தது.

அந்த ஓட்டலில் தங்கியிருந்த 30-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். சம்பவ பகுதியில் மீட்புப் பணிகள் நடை பெற்று வருகின்றன. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஓட்டல் முழுவதையும் பனிக் கட்டி சூழ்ந்துள்ளது. அவற்றை தோண்டி எடுத்து உடல்களை மீட்பது பெரும் சவாலாக உள்ளது. ஓட்டலுக்கு செல்லும் பாதையில் பனிச்சரிவு ஏற்பட்டிருப்பதால் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடிய வில்லை. ஹெலிகாப்டர் மூலமே மீட்புப் படை வீரர்கள் ஓட்டலை சென்றடைந்துள்ளனர். சம்பவ பகுதிக்கு இத்தாலி ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

பனிச்சரிவைத் தொடர்ந்து இத்தாலி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலநடுக்கம் நேரிட்ட கிரான் சாஸோ மலைப் பகுதி கிராமங்களில் வசிப்ப வர்கள் பாதுகாப்பான இடங் களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

ஈரான் தீ விபத்து

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 17 மாடி வர்த்தக கட்டிடத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கட்டிடத்தில் உள்ள குடோன் களில் பிளாஸ்டிக் பொருட்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. அவை தீ பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 30 வீரர்கள் உயிரிழந் தனர். 38 க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயமடைந்தனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பெரும் தீ விபத்து காரணமாக 17 மாடி கட்டிடம் அப்படியே நொறுங்கி தரைமட்டமானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

உலகம்

5 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்