கோடையில் வேகமாகப் பரவும் மலேரியா

கோடைகாலத்தில் மலேரியா வேகமாகப் பரவுகிறது என்று மருத்துவ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டில் உலகம் முழுவதும் மலேரியாவினால் 6,27,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக கொலம்பியா, எத்தியோப்பியா நாடுகளில் பிரிட்டன், அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

இதில் கோடையின்போது மலேரியா வேகமாகப் பரவுவதும் குளிர்காலத்தில் குறைவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயரமான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால் அவர்கள் மலேரியாவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

ஆப்பிரிக்க கண்டத்தில் மலேரியாவில் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த 2012 முதல் ஆப்பிரிக்காவில் மட்டும் சுமார் 20.7 கோடி பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் முன்காக்கும் நடவடிக்கையாக கொசுவலைகளைப் பயன்படுத்துவது மிகவும் அவசியம் என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE