கனடாவில் ரியல் எஸ்டேட் சந்தை விண்ணை முட்டும் அள வுக்கு உயர்ந்து வருவதை அடுத்து, வெளிநாட்டினர் அங்கு வீடுகள் வாங்குவதற்கு புதிய வரிகள் விதிக்கப்பட் டுள்ளன. வீட்டு வாடகைக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கனடாவின் வான்கூவர் நகரில் உள்ளூர் மக்கள் வசிப் பதற்கு வாடகை வீடு சுலபத்தில் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும் வாடகை அதிகமாக வசூலிக்கப்படு கிறது. இதைத்தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேல் யாரும் குடியேறாத வீட்டுக்கு வரி விதிக்க அரசு முடிவு செய்தது.
இந்நிலையில் டொராண்டோ ரியல் எஸ்டேட் சந்தையை கட்டுப்படுத்தும் நோக்கில், ஆன்டாரியோ மாகாண அரசு அசையா சொத்துகள் வாங்கும் வெளிநாட்டினருக்கு 15 சதவீத வரியை கடந்த வியாழக்கிழமை அறிமுகம் செய்தது. இதேபோல் காலியாக இருக்கும் வீடுகளுக்கும் வரி வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வீடு, அடுக்குமாடி குடியிருப்புகளின் விலைவாசி கடுமையாக குறைந் தது. வான்கூவரிலும் கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும் போது, 9 சதவீதம் வரை வீடுகளின் விலை கணிசமாக குறைந்திருப்பதாக கனடா ரியல் எஸ்டேட் சங்கம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago