ரசாயன வாயு தாக்குதல் பின்னணியில் சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்: இங்கிலாந்து சந்தேகம்

By ஏஎஃப்பி

சிரியாவில் கிளர்ச்சியாளர் பகுதியில் நடத்தப்பட்ட ரசாயன வாயு தாக்குதலில் கிடைத்துள்ள ஆதாரங்கள் அனைத்தும் இந்தத் தாக்குதலின் பின்னணியில் சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் இருப்பதாகவும் அதனால் அவரையே சந்தேகிப்பதாகவும் இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புதன்கிழமையன்று இங்கிலாந்து செய்தித் தொடர்பாளர் போரிஸ் ஜான்சன் கூறும்போது, "சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன வாயுத் தாக்குதலில் கிடைத்துள்ள ஆதாரங்கள் அனைத்தும் இந்தத் தாக்குதலின் பின்னணியில் சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் இருப்பதையே தெரிவிக்கின்றன. தன் சொந்த மக்களையே சட்டவிரோதமான ஆயுதங்களைப் பயன்படுத்தி கொன்றதன் மூலம் பஷார் அல் ஆசாத் தன்னுடைய ஆட்சி காட்டுமிராண்டித்தனமான ஆட்சி என்று அனைவருக்கும் உணர்த்தியுள்ளார்" என்றார்.

பலி எண்ணிக்கை அதிகரிப்பு

சிரிய ரசாயன வாயுத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. இதில் 20 பேர் குழந்தைகள்.

இதுகுறித்து சிரிய கண்காணிப்புக் குழு தரப்பில், "கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள கான் ஷேக்கான் நகர் மீது செவ்வாய்க்கிழமை அரசுப் படை போர் விமானங்கள் வான்வழித் தாக்குதல் நடத்தின. அப்போது ரசாயன வாயு குண்டுகள் வீசப்பட்டதில் 72 பேர் பலியாகினர். இதில் 20 பேர் குழந்தைகள், 17 பேர் பெண்கள். மேலும் பலர் காணவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.

ஐ.நா எச்சரிக்கை

சிரியாவில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட ரசாயன வாயு தாக்குதலுக்கு ஐ.நா கண்டனத்தை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

1 day ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

மேலும்