அரசியல் ரீதியான மாற்றத்துக்குத் தயாராவதை உணர்த்தும் வகையில், ஷாங்காய் நகரில் ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு இணையதளங்களுக்கு அனுமதி அளிக்க சீன அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, ஹாங்காங்கிலிருந்து வெளிவரும் "சௌத் சீனா மார்னிங் போஸ்ட்" வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷாங்காய் தாராள வர்த்தக மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அதிக அளவிலான அன்னிய முதலீடுகளை ஈர்க்க அரசு முடிவு செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக தடை செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு இணையதளங்களை மீண்டும் அனுமதிக்க சீன அரசு முடிவு செய்துள்ளது.
தி நியூயார்க் டைம்ஸ் இணையதளத்திற்கு சீன அரசு தடை விதித்திருந்தது. சீனா முன்னாள் அதிபர் வென் ஜியாபாவோ 270 கோடி அமெரிக்க டாலர்கள் சொத்து குவித்ததாக, நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து அந்த இணையதளத்துக்கு சீனா தடை விதித்திருந்தது.
வெளிநாட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஷாங்காய் சிறப்பு பொருளாதார மண்டலப் பகுதியில் இணையதள இணைப்பு வழங்குவதற்கு உரிமம் வழங்க சீன அரசு முன்வந்துள்ளது.
ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்கள் உலகெங்கும் கோலோச்சிய போதும், 2009 ஆம் ஆண்டு முதல் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளன. அதே சமயம், டுவிட்டரைப் போன்றே "சினா வெய்போ" அங்கு செயல்பாட்டில் உள்ளது.
அரசு செய்தி நிறுவனம்தான் சீனாவில் தனித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதற்குப் போட்டியாக "சினா வெய்போ" 30 கோடி கணக்குகளுடன் பெரு வளர்ச்சி பெற்றுள்ளது.
அதிக அளவு இணையத்தைப் பயன்படுத்தும் நாடுகளில் 48.5 கோடி மக்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. சமீப காலமாக் மத்தியக் கிழக்கு நாடுகளில் அரசியல் இயக்கங்களில் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் இணையதளங்கள் முக்கியப் பங்கு வகித்ததைத் தொடர்ந்து சீனாவில் இவற்றின் மீதான தடை கடுமையாக்கப் பட்டுள்ளது.
சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்து சீனா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.அமெரிக்காவுக்கு அடுத்த படியாக இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை உடைய நாடாக சீனா இருந்த போதும், ஊடகங்களின் மீதான கட்டுபாட்டை தளர்த்தவில்லை.
பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயக்கப்பட்டும் கிரேட் ஃபயர் வால் ஆப் சீனா என்ற மென்பொருள் மூலம், பல்வேறு இணையதளங்களை சீன அரசு தடை செய்து வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
12 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago