ஜப்பானுக்கான அமெரிக்க தூதராக கென்னடி மகள்

By செய்திப்பிரிவு

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எப்.கென்னடியின் மகள் கரோலின் கென்னடி ஜப்பானுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்பொறுப்பை ஏற்பது குறித்து அவர் கூறியுள்ளதாவது: ஆசியாவில் எங்கள் நாட்டின் முக்கியமான கூட்டாளி ஜப்பான். ஒரு தூதராக ஜப்பானுடனான அமெரிக்காவின் நல்லுறவை மேலும் மேம்படுத்துவேன். இரு நாடுகளுக்கு இடையிலான ராஜாங்கரீதியிலான உறவுகளும், வர்த்தக நடவடிக்கைகளும் தொடர்ந்து மேம்பட பாடுபடுவேன் என்றார்.

சீனா, தென் கொரியாவுடன் ஜப்பானுக்கு உள்ள தீவுகள் உரிமை தொடர்பான பிரச்னை குறித்து கரோலின் கென்னடி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. தென்கொரியா, அமெரிக்காவுக்கு மிகவும் நெருக்கமான நாடு என்பது இதற்கு முக்கியக் காரணம்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, தனது துறை அதிகாரிகளிடம் கரோலின் கென்னடியை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். அப்போது கரோலின் கென்னடி, சிறுமியாக இருந்தபோது அவரை வெள்ளை மாளிகையில் முதல்முறையாக சந்தித்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

4 days ago

மேலும்