துருக்கி சர்வதேச விமான நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 41 பேர் பலி - உலக தலைவர்கள் கடும் கண்டனம்

By ஏபி

துருக்கியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் புதன்கிழமை அன்று நிகழ்த்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 41 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 239 பேர் காயமடைந்தனர். இதற்கு உலக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இஸ்தான்புல் நகரில் உள்ள அடாடுர்க் சர்வதேச விமான நிலையம் ஐரோப்பிய யூனியனின் பரபரப்பான விமான நிலையங் களில் ஒன்று ஆகும். இதன் சர்வ தேச முனையத்தின் நுழைவு வாயில் வழியாக செவ்வாய் இரவு சுமார் 10 மணி அளவில் நுழைந்த 3 தீவிரவாதிகள் பயணிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதனால் பயணிகள் அலறி யடித்துக் கொண்டு சிதறி ஓடினர். இதனிடையே, தகவல் அறிந்து அங்கு சென்ற பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது தீவிரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

இந்தத் தாக்குதலில் 13 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 41 பேர் கொல்லப் பட்டனர். காயமடைந்த 239 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்க வில்லை. எனினும், “ஆதாரங் களை வைத்துப் பார்க்கும்போது இது ஐ.எஸ். தீவிரவாதிகளின் சதிச் செயலாக இருக்கலாம்” என்று அந்நாட்டு பிரதமர் பினாலி இல்திரிம் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் காரணமாக அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் ரிசப் தய்யிப் எர்டகன், “தீவிரவா தத்துக்கு எதிராக சர்வதேச நாடுகள் கூட்டாக இணைந்து போரிட வேண்டும்” என்றார்.

இந்தத் தாக்குதல் காரணமாக விமான நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ளது. குறிப்பாக ஜன்னல்களில் இருந்த கண்ணாடி களில் குண்டுகள் துளைக்கப் பட்டுள்ளன. மேலும் பயணிகளின் உடமைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

ஐஎஸ் தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதலுக்கு இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தியர்களுக்கு பாதிப்பில்லை

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “இஸ்தான்புல் விமான நிலையத்தின் மீதான தாக்குதல் மனிதத்தன்மையற்றது, கொடூர மானது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். இதில் உயிரிழந் தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள் கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த் தனை செய்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலில் இந்தியர் களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

34 mins ago

உலகம்

3 hours ago

உலகம்

4 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்