எபோலா எதிர்ப்பு: ஃபேஸ்புக் நிறுவனர் ஸக்கர்பெர்க் நிதியுதவி

By ஐஏஎன்எஸ்

எபோலா பாதிப்பை எதிர்த்து போராடி வரும் அமெரிக்காவின் நோய் தடுப்பு மையத்துக்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவியும் இணைந்து 250 லட்ச டாலர்கள் நிதி உதவி அளித்துள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பரவி வரும் எபோலா நோய்க்கு இதுவரை 4,447 பேர் பலியாகி உள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக வாரத்துக்கு 10,000 புதிய நோயாளிகள் ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்படுகின்றனர். ஸ்பெயின், டென்மார்க், அமெரிக்கா போன்ற பிற நாடுகளிலும் தற்போது எபோலா நோய் பரவி உள்ளது பெரும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இந்நோய் எதிர்ப்புக்காக போராடும் அமெரிக்காவின் எபோலா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்துக்கு சுமார் 250 லட்ச டாலர்கள் நிதி உதவி அளிப்பதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்தார்.

இந்த தொகையை தனது மனைவி பிரிஸ்ஸில்லாவுடன் இணைந்து வழங்குவதாக அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் எபோலா நோயை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் எச்.ஐ.வி., போலியோ போன்ற கொடிய நோய்களுக்கு உலகம் போராடி கொண்டிருப்பது போன்ற சூழல் ஏற்பட்டுவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

46 secs ago

உலகம்

10 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்