ஜேம்ஸ் பாண்டாக நடித்துப் புகழ்பெற்ற பிரிட்டன் நடிகர் ரோஜர் மூர் காலமானார், அவருக்கு வயது 89.
இத்தகவலை அவரது குடும்பத்தினர் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
ரோஜர் மூர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் அவர் மரணமடைந்தார்.
சுமார் 12 ஆண்டுகள் இவர் ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் கலக்கினார். இவரது ஸ்பை ஹூ லவ்ட் மீ, மூன் ரேக்கர் போன்ற படங்கள் உலகப்புகழ் பெற்றவை என்பதோடு, இந்திய ரசிகர்களையும் கவர்ந்திழுத்த படங்களாகும்.
ஷான் கானரிக்குப் பிறகு 1972-ல் ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தை ரோஜர் மூர் ஏற்றார். ஜேம்ஸ் பாண்ட் 007-ஆக லிவ் அண்ட் லெட் டை மூலம் அறிமுகமானார். நீண்ட காலம் ஜேம்ஸ் பாண்டாக நடித்த பெருமை ரோஜர் மூருக்கு உண்டு. தி மேன் வித் த கோல்டன் கன், தி ஸ்பை ஹூ லவ்ட் மீ, மூன் ரேக்கர், ஃபார் யுவர் அய்ஸ் ஒன்லி, ஆக்டோபஸ்ஸி, எ வியூ டு கில் ஆகிய படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்துள்ளார். 1991-ம் ஆண்டு யுனிசெஃப் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டார்.
ஜேம்ஸ் பாண்டாக நடித்து வந்த காலத்தில் வேறு 13 படங்களிலும் அவர் நடித்திருந்தார். நிறைய தொலைக்காட்சி தொடர்களிலும் ரோஜர் மூர் நடித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
8 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago