மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய சோட்டா ராஜன் இந்தோனேசியாவில் கைது

By ஏஎஃப்பி

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நிழல்உலக தாதா சோட்டா ராஜன் (55) இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 1993 மார்ச் 13-ம் தேதி மும்பையில் அடுத்தடுத்து 13 இடங் களில் குண்டுகள் வெடித்தன. இதில் 257 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தின் மூளை யாகச் செயல்பட்ட மும்பை நிழல்உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்று விட்டார்.

தாவூத்தின் வலதுகரமாக செயல்பட்ட சோட்டா ராஜனுக்கும் மும்பை குண்டுவெடிப்பில் முக்கிய தொடர்பு உள்ளது. அவரும் வெளி நாட்டுக்கு தப்பிவிட்டார். அவர் ஆஸ்திரேலியாவில் தலைமறை வாக வாழ்வதாக இந்திய உளவுத் துறையினர் மத்திய அரசுக்கு அண்மையில் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து இன்டர்போல் போலீஸ் உதவியுடன் ஆஸ்திரேலி யாவில் சோட்டா ராஜனை தேடும் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது இந்நிலையில் அவர் அங்கி ருந்து இந்தோனேசியாவுக்கு தப்பிச் செல்வதாக தகவல் கிடைத்தது.

இதுதொடர்பாக ஆஸ்திரேலிய உளவுத் துறையினர் இந்தோனேசிய போலீஸாரை உஷார்படுத்தினர். அதன்பேரில் இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாதலமான பாலி விமான நிலையத்தில் வந்திறங்கிய சோட்டா ராஜன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

இதை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சிபிஐ இயக்குநர் அனில் சின்ஹாவும் உறுதி செய்துள்ளனர்.

சோட்டா ராஜனை இந்தியா கொண்டு வருவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யாகூப் மேமன் அண்மையில் தூக்கிலிடப்பட்டது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 mins ago

உலகம்

21 hours ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்