அமெரிக்க வெள்ளை மாளிகை சுவரின் மீது புதன்கிழமை இரவு அத்துமீறி ஏறி குதித்த நபர் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கடந்த இரு மாதங்களில் மூன்றாவது முறையாக இத்தகைய சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளது.
வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா வாழும் வெள்ளை மாளிகையினுள் மூன்றாவது முறையாக அத்துமீறி நுழைய முயற்சித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. புதன்கிழமை இரவு 7.15 மணி அளவில் வெள்ளை மாளிகை சுவர் ஏறி குதித்த அந்த மர்ம நபர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நாய்களால் தாக்கப்பட்டார். இதனை அடுத்து விரைந்த போலீஸார் அவரை கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் அவரது பெயர் டாமினிக் அடிசேனியா (23) என்று தெரியவந்துள்ளது. சுவர் ஏறி குதித்த அவரிடம் எந்த பயங்கர ஆயுதமும் இருக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு பணியில் இருந்த நாய்கள் தாக்கியதால் படுகாயம் அடைந்த அந்த நபர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் சில நாட்களில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் இதே போன்று இரண்டு முறை வெள்ளை மாளிகை சுவர் ஏறி குதித்த சம்பவம் நிகழ்ந்தது. உலகிலேயே பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகம் உள்ள இடமாக கருதப்படும் வெள்ளை மாளிகைக்குள் மர்ம நபர்கள் தொடர்ந்து அத்துமீறி நுழையும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
20 mins ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago