தென் சீனக் கடல் விவகாரம்: போருக்குத் தயாராக இருக்க அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

By கார்டியன்

தென் சீனக் கடல் விவகாரத்தில் முட்டுக்கட்டை ஏற்படுத்தினால் போருக்குத் தயாராக இருக்குமாறு அமெரிக்காவுக்கு சீனா எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக சீன தேசிய ஊடகம் வெளியிட்ட செய்தியில், "ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற பிறகு இரு தரப்பு ராணுவ மோதலுக்கு தயாராக இருக்க வேண்டும்" என்று செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச கடல் போக்குவரத்தின் முக்கிய பாதையாக திகழும் தென்சீனக் கடல் பகுதி முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதேபோல அந்த பிராந்தியத்தில் அமைந்துள்ள தைவான், தங்களின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் சீனா வாதிட்டு வருகிறது.

இந்த இரு விவகாரங்களிலும் சர்வதேச நாடுகள் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளன. தென் சீனக் கடல் பகுதி சர்வதேச எல்லைக்கு உட்பட்டது என்று அமெரிக்கா கூறிவருகிறது.

தங்கள் கடல் பகுதியை சீனா ஆக்கிரமித்து வருவதாக வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருணே உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

முன்னதாக கடந்த வாரம் தென் சீனக் கடல் பகுதியில் தங்களது ஆதிக்கத்தைக் காட்ட சீனா போர் ஒத்திகையில் ஈடுபட்டது அந்த பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்த, இது வழக்கமான போர் ஒத்திகைதான் என்று சீனக் கடற்படை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

8 days ago

உலகம்

10 days ago

மேலும்