அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு பதிலடி அளிக்கும் வகையில் அதிக திறன் வேகம் கொண்ட அணுஆயுத ஏவுகணை சோதனையை எந்த நேரத்திலும் நடத்துவோம் என்று வடகொரியா எச்சரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீனா ஆகியவை கடும் எச்சரிக்கைகள் விடுத்தும் தனது 6-வது அணுகுண்டு சோதனை மற்றும் நீண்ட தூர ஏவுகணை சோதனை ஆகியவற்றை நடத்த வடகொரியா மீண்டும் ஆயத்தமாகி வருகிறது.
முன்னதாக வடகொரியாவின் தொடர் அணுஆயுத ஏவுகணை சோதனைகளைத் தொடர்ந்து, அமெரிக்கா அந்நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்தது. அதனைத் தொடர்ந்து கொரிய தீபகற்பப் பகுதியில் தனது கடற்படையின் யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் போர்க்கப்பலை கொரிய தீபகற்பத்தில் நிறுத்தியது.
இந்த நிலையில் அமெரிக்காவின் போர்க் கப்பலை தாக்கப் போவதாக வடகொரியா அந்நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்தது. இதனைத் தொடர்ந்து ஜப்பான் அரசு அமெரிக்க போர்க் கப்பலுக்கு பாதுகாப்பு அளித்தது.
இந்த நிலையில் மீண்டும் அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வடகொரியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறும்போது, "அமெரிக்கா எடுக்கும் எந்த வித நடவடிக்கைக்கும் பதிலடி கொடுக்க வடகொரியா தயாராகவே இருக்கிறது. அமெரிக்காவுக்கு பதிலடி அளிக்கும் வகையில் அதிக திறன் வேகம் கொண்ட அணுஆயுத ஏவுகணை சோதனையை வடகொரியா எந்த நேரத்திலும் நடத்தும்" என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago