பிட்காயின்களுக்கு வியட்நாம் தடை

By செய்திப்பிரிவு

பிட் காயின்கள் பயன்படுத்துவதற்கு வியட்நாம் தடைவிதித் துள்ளது. வியட்நாமிலுள்ள வங்கிகள் பிட் காயின்களைக் கையாளக்கூடாது என அந்நாட்டு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

டிஜிட்டல் நாணயமான பிட் காயின்கள் யாரால் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன என் பதைப் பிறர் அறியாமல் பயன்படுத்த முடியும். சங்கேத குறியீடுகளைப் பயன்படுத்தி மின்னணு முறையில் பிட் காயின்கள் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன.

“பிட்காயின்களின் உரிமையாளர், வர்த்தகம், பரிவர்த்தனை, அதன் சொத்து மதிப்பு ஆகியவை அவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு அபாயத்தை அளிப்பவை. இதனைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது. பிட் காயின்கள் மூலம் முதலீடு செய்வது, பரிவர்த்தனைகளை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகள் சட்ட விரோத மானவை” என வியட்நாம் ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

வியட்நாமில் பிட் காயின்கள் அதிக அளவு பயன்படுத்தப்படுவதில்லை. இருப்பினும் பிட்காயின்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை பிட்காயின்களின் மிகப் பெரிய பரிவர்த்தனை சந்தையான ஜப்பானின் எம்டி காக்ஸ் (எம்டி ஜிஓஎக்ஸ்) திடீரென முடங் கியது. இது பிட்காயின்களைப் பயன் படுத்துவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிட்காயின் பயன்படுத்து வதற்கு சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், பெரும்பாலான நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளன. சில நாடுகள் அதிகாரப்பூர்வமாகவே பிட்காயின்களை ஏற்றுக் கொண்டுள்ளன. எதிர்காலத்தில் பிட்காயின்கள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படும் நாணயமாக மாறும் என சர்வதேச நிதிக் கழகம் (ஐஐஎப்) தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்