ஐ.நா. பொருளாதார, சமூக கவுன்சில் உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வு

By பிடிஐ

ஐ.நா. சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் (இசிஓஎஸ்ஓசி) உறுப்பினர் தேர்தலில் அதிகப்படியான வாக்குகளுடன் இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இசிஓஎஸ்ஓசி அமைப்பில் இந்தியா உட்பட 18 உறுப்பு நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதன் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொது சபையில், புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

இதில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் சார்பில் 3 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்தியா 183 வாக்குகளும், ஜப்பான், பாகிஸ்தான் தலா 181 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றன. புதிய உறுப்பினர்கள் 2015, ஜனவரி 1-ம் தேதி முதல் மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் நீடிக்கலாம்.

ஒரு வாரத்துக்கு முன்பு நடைபெற்ற 47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் புதிய உறுப்பினர்களுக்கான (2015-17) தேர்தலில் இந்தியா மீண்டும் வெற்றி பெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

13 hours ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்