இஸ்தான்புல் இரவு விடுதியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது தாக்குதல் நடத்தி 39 பேர் பலியானதுக்கு காரணமான நபர் பிடிபட்டதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து என்டிவி தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில், "போலீஸார் நடத்திய சிறப்புத் தேடுதல் வேட்டையில் இசன்யூட் மாவட்டத்தில் இஸ்தான்புல் இரவு விடுதியில் தாக்குதல் நடத்திய நபர் பிடிப்பட்டார். கிர்கிஸ்தானைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் அந்த நபர் தங்கியிருந்தது கண்டுபிக்கப்படிக்கப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், ரத்தக் கறை படிந்த ஆடையை அணிந்த அந்த நபரை, போலீஸார் பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தையும் துருக்கி ஊகடங்கள் வெளியிட்டுள்ளன.
முன்னதாக இஸ்தான்புல் நகரில் உள்ள பிரபலமான ரீனா இரவு விடுதியில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த ஒருவர், விடுதியின் நுழைவு வாயிலில் இருந்த ஒரு காவலர் உட்பட 2 பேரை துப்பாக்கியால் சுட்டார்.
பின்னர் விடுதிக்குள் நுழைந்த அவர் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார். இதனால் விடுதியில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு இங்கும் அங்குமாக ஓடினர். இதனிடையே அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்தத் தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட 39 பேர் பலியாகினர்.
இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
5 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago