ஒபாமா கேர் திட்டத்துக்கு பதிலாக அனைவருக்குமான மருத்துவ காப்பீடு: ட்ரம்ப் அறிவிப்பு

By ராய்ட்டர்ஸ்

ஒபாமாவின் கேர் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு பதிலாக 'அனைவருக்குமான மருத்துவ காப்பீடு' திட்டத்தை உறுதி செய்யவிருப்பதாக அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.

வாஷிங்டன் போஸ்ட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த நேர்காணல் ஒன்றில் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்தார். தான் அறிமுகப்படுத்தும் மருத்துவக் காப்பீடு திட்டத்தைப் பற்றிய மேற்கொண்ட தகவல் ஏதும் ட்ரம்ப் தெரிவிக்கவில்லை.

புதிதாக அறிமுகப்படுத்தப்படும் மருத்துவக் காப்பீடு திட்டம் பற்றி ட்ரம்ப் கூறும்போது, "இது எல்லோருக்குமான மருத்துவக் காப்பீடு திட்டம் ஆகும். காப்பீட்டுக்கான கட்டணம் குறைவாகவே இருக்கும். இந்த திட்டம் முடிவு பெறும் தருவாயில் உள்ளது.

குடியரசு கட்சியின் சார்பாக சுகாதார செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டாம் பிரைஸ் பதவியை நாடளுமன்றம் உறுதி செய்யும்வரை நாங்கள் காத்திருக்கிறோம்" என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

மேலும் இந்த திட்டம் தொடர்பாக, மருத்துவ நிறுவனங்களை அரசுடன் நேரடி பேச்சு வார்த்தைக்கு அழைக்க விருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

விமர்சிக்கப்பட்ட ஒபாமா கேர் திட்டம்

அதிபர் பராக் ஒபாமாவில் கடந்த 2010 மார்ச் 23-ம் தேதி ஒபாமா கேர் மருத்துவக் காப்பீடு திட்டம் அமல் செய்யப்பட்டது. இது மக்கள் பணத்தை தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் திட்டம் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்ட திட்டமாகும்.

அதாவது 2014-ம் ஆண்டு முழு அளவில் அமல்படுத்தப்பட்ட இந்த ஒபாமாகேர் திட்டத்தின் படி அமெரிக்கர்கள் அனைவரும் அரசு அங்கீகரித்த காப்பீட்டுத் திட்டத்தை கட்டாயம் வாங்கியாக வேண்டும், இல்லையெனில் அபராதம் செலுத்த வேண்டும். அனைவருக்கும் கட்டுப்படியாகும் மருத்துவ உதவி என்ற பெயரில் பிரச்சாரிக்கப்பட்ட இத்திட்டம் அதன் கருத்தியல் தளத்தில் ‘சொந்தப் பொறுப்பு’ என்பதாகவும் பரப்புரை செய்யப்பட்டது. இதன் படி அமெரிக்க பணியாளர்கள் சம்பளத்தில் கணிசமான தொகை மருத்துவக் காப்பீடு என்று பிடித்தம் செய்யப்படும். இதனால் மற்ற கடன் உள்ளிட்ட பிரச்சினைகளை சமாளிப்பது, ஏன் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது கூட சராசரி அமெரிக்கருக்கு பிரச்சினையானது.

அமெரிக்க மக்களின் வருவாயில் ஒரு பகுதியை மருத்துவ நலம் என்ற பெயரில் பிடுங்கி கார்ப்பரேட் பைகளில் திணித்த இந்த ஒபாமாகேர் திட்டத்தின் தோல்விகளும், திரைமறைவு கார்ப்பரேட் நடவடிக்கைகளும், மக்கள் பட்ட அவதிகளும் அங்கு பெரிய அளவில் புலன் விசாரணை பத்திரிகாவாதம் மூலம் அம்பலமாக, ஜனநாயகக் கட்சியின் தோல்விக்கே ஒபாமாகேர் காரணமானது என்று சில அமெரிக்க இடதுசாரிப் பத்திரிகைகள் குறிப்பிட்டன.

கடந்த நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ஒபாமா கேர் விவகாரத்தை குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் எழுப்பினார்.

தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க அதிபரானால் ஒபாமா கேர் திட்டத்துக்குப் பதிலாக புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று ட்ரம்ப் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்